100% ரசிகர்கள் அனுமதி என்ற உத்தரவை அரசு திரும்பப் பெற்றால் மாஸ்டர் படம் மட்டுமே வெளியிடப்படும் என திரையரங்க உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது
தீபாவளி, பொங்கல் என்றால் திரையரங்குகள் திருவிழாவாக மாறும். புதுப்படங்கள், ஆட்டம், பாட்டமென களைக்கட்டும். ஆனால் கடந்த தீபாவளி அப்படியாக இருக்கவில்லை. காரணம் கொரோனா. கொரோனா காரணமாக பல மாதங்களாக மூடப்பட்ட திரையரங்குகள் தீபாவளி நேரத்தில் தான் 50% பார்வையாளர்கள் என்ற அறிவிப்புடன் திறக்கப்பட்டது. ஆனால் அதற்குப் பின் பெரிய திரைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. அடுத்து மாஸ்டர், ஈஸ்வரன் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
அதன்படியே இரு படங்களும் பொங்கலுக்கு தியேட்டரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டுமென விஜய், சிம்பு கோரிக்கை விடுத்தனர். அதன்படியே 100 இருக்கைகளுக்கு அரசு அனுமதி கொடுத்தது. ஆனால் மறுபுறம் அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு குரல்கள் கிளம்பின. மூடிய அரங்கு என்பதால் இது ஆபத்தானது, கொரோனா எளிதில் பரவும் என பலர் கருத்து தெரிவித்தனர். இதற்கிடையே அரசு தன்னுடைய நிலையில் மாற்றம் கொண்டுவரும் என தெரிகிறது. 100% இருக்கை தொடர்பான விவகாரத்துக்கு முதல்வருடன் பேசி முடிவுஎடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.
இந்நிலையில் 100% ரசிகர்கள் அனுமதி என்ற உத்தரவை அரசு திரும்பப் பெற்றால் மாஸ்டர் படம் மட்டுமே வெளியிடப்படும் என திரையரங்க உரிமையாளர் சங்கத்தலைவர் திருப்பூர் சுப்ரமணியன், தெரிவித்துள்ளார். ஒருவேளை மாஸ்டர் படம் வெளியாவது தள்ளிப்போனால் மட்டுமே ஈஸ்வரன் வெளியிட முடியும் என்றும் அவர் கூறினார்.
இதுஒருபுறம் இருக்க, 50% இருக்கைகளாக குறைக்கப்பட்டாலும் ஈஸ்வரன் வெளியாகும் எனவும் பொங்கல் பண்டிகையை மனதில் வைத்தே இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அப்படக்குழு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/2JVP0F0100% ரசிகர்கள் அனுமதி என்ற உத்தரவை அரசு திரும்பப் பெற்றால் மாஸ்டர் படம் மட்டுமே வெளியிடப்படும் என திரையரங்க உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது
தீபாவளி, பொங்கல் என்றால் திரையரங்குகள் திருவிழாவாக மாறும். புதுப்படங்கள், ஆட்டம், பாட்டமென களைக்கட்டும். ஆனால் கடந்த தீபாவளி அப்படியாக இருக்கவில்லை. காரணம் கொரோனா. கொரோனா காரணமாக பல மாதங்களாக மூடப்பட்ட திரையரங்குகள் தீபாவளி நேரத்தில் தான் 50% பார்வையாளர்கள் என்ற அறிவிப்புடன் திறக்கப்பட்டது. ஆனால் அதற்குப் பின் பெரிய திரைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. அடுத்து மாஸ்டர், ஈஸ்வரன் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
அதன்படியே இரு படங்களும் பொங்கலுக்கு தியேட்டரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டுமென விஜய், சிம்பு கோரிக்கை விடுத்தனர். அதன்படியே 100 இருக்கைகளுக்கு அரசு அனுமதி கொடுத்தது. ஆனால் மறுபுறம் அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு குரல்கள் கிளம்பின. மூடிய அரங்கு என்பதால் இது ஆபத்தானது, கொரோனா எளிதில் பரவும் என பலர் கருத்து தெரிவித்தனர். இதற்கிடையே அரசு தன்னுடைய நிலையில் மாற்றம் கொண்டுவரும் என தெரிகிறது. 100% இருக்கை தொடர்பான விவகாரத்துக்கு முதல்வருடன் பேசி முடிவுஎடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.
இந்நிலையில் 100% ரசிகர்கள் அனுமதி என்ற உத்தரவை அரசு திரும்பப் பெற்றால் மாஸ்டர் படம் மட்டுமே வெளியிடப்படும் என திரையரங்க உரிமையாளர் சங்கத்தலைவர் திருப்பூர் சுப்ரமணியன், தெரிவித்துள்ளார். ஒருவேளை மாஸ்டர் படம் வெளியாவது தள்ளிப்போனால் மட்டுமே ஈஸ்வரன் வெளியிட முடியும் என்றும் அவர் கூறினார்.
இதுஒருபுறம் இருக்க, 50% இருக்கைகளாக குறைக்கப்பட்டாலும் ஈஸ்வரன் வெளியாகும் எனவும் பொங்கல் பண்டிகையை மனதில் வைத்தே இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அப்படக்குழு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்