சாத்தூர்: வெம்பக்கோட்டையில் நடந்துவரும் அகழாய்வில் இன்று பண்டைகால சங்கு வளையல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும், அங்கு நடைபெற்றுவரும் தொல்பொருள் கண்காட்சியை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் மேட்டுக்காட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டன. அதைத்தொடர்ந்து கடந்த மாதம் 2-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதுவரை இந்த அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட நுண் கற்காலம் முதல் வரலாற்று தொடக்க காலம் வரை இப்பகுதியில் பயன்படுத்தப்பட்ட பானை ஓடுகள், நுண்கற்கால கருவிகள், பல வகையான பாசிமணிகள், சுடு மண்ணாலான காதணிகள், பொம்மைகள், தக்களி, சங்ககால வளையல்கள், மோதிரங்கள், சில்லு வட்டுகள், இரும்பு உருக்கு கழிவுகள், சங்கு வளையல்கள் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்துள்ளன.
https://ift.tt/Z9mxRMUசாத்தூர்: வெம்பக்கோட்டையில் நடந்துவரும் அகழாய்வில் இன்று பண்டைகால சங்கு வளையல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும், அங்கு நடைபெற்றுவரும் தொல்பொருள் கண்காட்சியை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் மேட்டுக்காட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டன. அதைத்தொடர்ந்து கடந்த மாதம் 2-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதுவரை இந்த அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட நுண் கற்காலம் முதல் வரலாற்று தொடக்க காலம் வரை இப்பகுதியில் பயன்படுத்தப்பட்ட பானை ஓடுகள், நுண்கற்கால கருவிகள், பல வகையான பாசிமணிகள், சுடு மண்ணாலான காதணிகள், பொம்மைகள், தக்களி, சங்ககால வளையல்கள், மோதிரங்கள், சில்லு வட்டுகள், இரும்பு உருக்கு கழிவுகள், சங்கு வளையல்கள் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்துள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்