ஆத்தோரத்தில் அமர்ந்து காற்று வாங்கிக்கொண்டே, ஆற்று மீன்களைப் பிடித்து, சூடாக சமைத்து சாப்பிட ஆசையா! அப்போது நீங்கள் உடனடியாகப் பயணப்பட வேண்டிய இடம் கொடிவேரி! ஈரோடு மாவட்டம் கோபிக்கு அருகில் இருக்கிறது கொடிவேரி. அங்கே இருக்கும் சுமார் முப்பது அடி உயர சிறிய அணைக்கட்டு, பவானி சாகர் அணையிலிருந்து வரும் தண்ணீரைத் தடுத்து நிறுத்தி வெளியேற்றுகிறது.
சிறிய அருவி போல வித்தியாசமாக இருக்கும் இந்தக் கொடிவேரி அணைக்கட்டில் குளிக்க மக்கள் விடுமுறை நாட்களில் படை எடுப்பது வாடிக்கை. கோபியிலிருந்து பசுமை போர்த்திய பகுதிக்கு நடுவிலான சாலையில் பயணித்தால் சுமார் 20 நிமிடங்களில் கொடிவேரியை அடையலாம். இருபுறமும் வாழை மரத் தோப்புகள், நெல் வயல்கள் என கண்களுக்கு விருந்தளிக்கும் சாலை, குளிர்ச்சி தரும் கொடிவேரிக்கு நம்மை அழைத்துச் செல்கிறது.
https://ift.tt/tMS7Kpfஆத்தோரத்தில் அமர்ந்து காற்று வாங்கிக்கொண்டே, ஆற்று மீன்களைப் பிடித்து, சூடாக சமைத்து சாப்பிட ஆசையா! அப்போது நீங்கள் உடனடியாகப் பயணப்பட வேண்டிய இடம் கொடிவேரி! ஈரோடு மாவட்டம் கோபிக்கு அருகில் இருக்கிறது கொடிவேரி. அங்கே இருக்கும் சுமார் முப்பது அடி உயர சிறிய அணைக்கட்டு, பவானி சாகர் அணையிலிருந்து வரும் தண்ணீரைத் தடுத்து நிறுத்தி வெளியேற்றுகிறது.
சிறிய அருவி போல வித்தியாசமாக இருக்கும் இந்தக் கொடிவேரி அணைக்கட்டில் குளிக்க மக்கள் விடுமுறை நாட்களில் படை எடுப்பது வாடிக்கை. கோபியிலிருந்து பசுமை போர்த்திய பகுதிக்கு நடுவிலான சாலையில் பயணித்தால் சுமார் 20 நிமிடங்களில் கொடிவேரியை அடையலாம். இருபுறமும் வாழை மரத் தோப்புகள், நெல் வயல்கள் என கண்களுக்கு விருந்தளிக்கும் சாலை, குளிர்ச்சி தரும் கொடிவேரிக்கு நம்மை அழைத்துச் செல்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்