டெல்லி மக்கள் அலுவலகத்திற்கும் வேலைக்கும் செல்வதற்கு மாதம் ஒரு முறையாவது மிதி வண்டியை பயன்படுத்த வேண்டும் என அம்மாநில துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கேட்டுக்கொண்டுள்ளார்.
தலைநகர் டெல்லியில் கடந்த தீபாவளி முதலே காற்று மாசு கடுமையாக இருந்து வருகிறது. இதனால் டெல்லிவாசிகளில் பலர் மூச்சுத்திணறல் உள்ளிட்ட உடல் நலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பொது மக்கள் அலுவலகம் செல்வதற்கும் வேலைக்கு செல்வதற்கும் மாதம் ஒருநாளாவது மிதி வண்டியை பயன்படுத்த வேண்டும் என்றும் இதனால் காற்று மாசு ஓரளவு குறையும் என்றும் அமைச்சர் மணீஷ் சிசோடியா கூறியுள்ளார்.
மேலும் கட்டுமானத் துறையினரும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி காற்று மாசை குறைக்க உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். காற்று மாசு பிரச்னையிலிருந்து மக்களை காக்க பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை நடத்த முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3HkV8iTடெல்லி மக்கள் அலுவலகத்திற்கும் வேலைக்கும் செல்வதற்கு மாதம் ஒரு முறையாவது மிதி வண்டியை பயன்படுத்த வேண்டும் என அம்மாநில துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கேட்டுக்கொண்டுள்ளார்.
தலைநகர் டெல்லியில் கடந்த தீபாவளி முதலே காற்று மாசு கடுமையாக இருந்து வருகிறது. இதனால் டெல்லிவாசிகளில் பலர் மூச்சுத்திணறல் உள்ளிட்ட உடல் நலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பொது மக்கள் அலுவலகம் செல்வதற்கும் வேலைக்கு செல்வதற்கும் மாதம் ஒருநாளாவது மிதி வண்டியை பயன்படுத்த வேண்டும் என்றும் இதனால் காற்று மாசு ஓரளவு குறையும் என்றும் அமைச்சர் மணீஷ் சிசோடியா கூறியுள்ளார்.
மேலும் கட்டுமானத் துறையினரும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி காற்று மாசை குறைக்க உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். காற்று மாசு பிரச்னையிலிருந்து மக்களை காக்க பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை நடத்த முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்