ராணுவ தளபதி முகுந்த் நரவானே 5 நாள் பயணமாக இஸ்ரேல் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இஸ்ரேல் உடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே இப்பயணத்தின் நோக்கம் என இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய ஆயுதங்களையும் போர் தளவாடங்களையும் உருவாக்குவது குறித்தும் இப்பயணத்தில் பேசப்படும் எனத் தெரிகிறது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்புத்துறை செயலாளர் அஜய் குமார் ஆகியோரும் அண்மையில் இஸ்ரேல் சென்று வந்திருந்தனர்.
விமானப்படைத் தளபதியாக இருந்த ஆர்.கே.எஸ். பதூரியாவும் கடந்த ஆகஸ்டில் இஸ்ரேல் சென்றிருந்தார். சீனாவுடன் எல்லையில் பதற்றம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையிலும் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் தலையெடுத்துள்ள சூழலிலும் இந்திய முக்கிய பிரமுகர்களின் அடுத்தடுத்த இ்ஸ்ரேல் பயணங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3oKkWg3ராணுவ தளபதி முகுந்த் நரவானே 5 நாள் பயணமாக இஸ்ரேல் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இஸ்ரேல் உடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே இப்பயணத்தின் நோக்கம் என இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய ஆயுதங்களையும் போர் தளவாடங்களையும் உருவாக்குவது குறித்தும் இப்பயணத்தில் பேசப்படும் எனத் தெரிகிறது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்புத்துறை செயலாளர் அஜய் குமார் ஆகியோரும் அண்மையில் இஸ்ரேல் சென்று வந்திருந்தனர்.
விமானப்படைத் தளபதியாக இருந்த ஆர்.கே.எஸ். பதூரியாவும் கடந்த ஆகஸ்டில் இஸ்ரேல் சென்றிருந்தார். சீனாவுடன் எல்லையில் பதற்றம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையிலும் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் தலையெடுத்துள்ள சூழலிலும் இந்திய முக்கிய பிரமுகர்களின் அடுத்தடுத்த இ்ஸ்ரேல் பயணங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்