“ஒவ்வொரு மாவட்டத்திலும் விசாகா கமிட்டியை பள்ளிக்கல்வித்துறை அமைக்க வேண்டும்” என்றும், “முதல்வர் மு.க.ஸ்டாலின், மீனவர்களுடன் ஒரு சந்திப்பு நடத்த வேண்டும்” என்றும் ராமேஸ்வரத்தில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி பேசியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது மாவட்ட மாநாடு இரண்டு நாள்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு கமுதி, முதுகுளத்தூர், கடலாடி, திருவாடனை, ஆர்.எஸ். மங்கலம், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி ஆகியோர் கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பித்தனர். அதன் பின்னர் அவர் பேட்டி அளித்தபோது, “ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் விளைவிக்கக்கூடிய பொருட்கள் அனைத்துக்கும் நியாயமான ஒரு விலை கிடைப்பதென்பது, ஒவ்வொரு ஆண்டும் சிரமமாக இருக்கிறது. இதனை மாநில அரசு கருத்தில்கொண்டு, ஒரு தீர்வுக்கு கொண்டு வரவேண்டும்.
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் சுமார் 8 லட்சம் மீனவர்கள் இருக்கிறார்கள். சமீபகாலமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விவசாயிகள், சாதாரண எளிய மக்கள், மலைவாழ் மக்களுடன் நேரடியாக அவருடைய வீட்டுக்கு சென்று பிரச்னையை கேட்டு அறிந்து வருகிறார். அதுபோல் முதல்வர் இந்த மீனவர்களின் பிரச்சனையை அறியும் வகையில் மீனவர்களுடன் ஒரு சந்திப்பு நடத்தினால் உபயோகமாக இருக்கும் என நான் கருதுகிறேன்.
கடந்த 2014ஆம் ஆண்டு ஒன்றிய பாஜக அரசு மீனவர்களுக்கு என்று தனித்துறை அமைக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார்கள். ஆனால் அதனை ஏற்படுத்தவில்லை. அதனை ஏற்படுத்த வேண்டுமென அவர்களை தொடர்ந்து வலியுறுத்த விரும்புகிறோம்.
கோவையில் பள்ளி மாணவி பாலியல் தொந்தரவால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கும் செய்தியை அறிந்தேன். தான் படிக்கக்கூடிய பள்ளிக்கூடத்திலிருந்து உயர்ந்த இடத்தில் இருக்கக்கூடிய ஆசிரியரிடமிருந்து பாலியல் தொந்தரவு வருகிறபோது, அந்தப் பள்ளி மாணவிக்கு என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு திகைப்பை, அதிர்ச்சியை, மன வலியை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் போக்சோ சட்டத்தின்படி பள்ளியின் முதல்வர், ஆசிரியர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
தொடர்புடைய செய்தி: கோவை மாணவி தற்கொலை: பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனிடம் விசாரணை
பள்ளியின் உரிமையாளர் மீதும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய மாதர் சங்கம் வலியுறுத்தி இருக்கிறார்கள். அதனை மாநில அரசு கவனிக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளிக்கல்வித்துறைக்கு என்று விசாகா கமிட்டி அமைக்கப்பட வேண்டும். அதில் அதிகாரி மட்டுமில்லாமல் MSW படித்து இருக்க கூடிய, அதில் பயிற்சி பெற்றிருக்கக்கூடிய ஒரு சமூக சேவகராக ஒரு பெண்ணை நியமிக்க வேண்டும். அப்படி நியமிக்கப்படும் போது மாணவிகளும், பெண் ஆசிரியர்களும் சொல்ல முடியாததை அந்தக் கவுசிலிங் அமைப்புகள் சொல்ல முடியும்.
மற்ற துறைகளைவிடவும் கல்வித்துறையில் இளம் குழந்தைகள், பெண் ஆசிரியர் பாதிக்கப்படும்போது அது சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஆகவே இந்தத் துறையை முக்கியமான துறையாக கருதி, இதில் வரக்கூடிய பாலியல் பிரச்சனைகளை கட்டுப்படுத்துவதற்கு குறைப்பதற்கு ஆண் பெண் சமத்துவம் என்ற அரசியல் கோட்பாட்டை கொண்டு செல்வதற்கு அரசு தரப்பில் சமூக நலத்துறை, கல்வித்துறை இணைந்து ஒரு முயற்சி எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/2YJSUYS“ஒவ்வொரு மாவட்டத்திலும் விசாகா கமிட்டியை பள்ளிக்கல்வித்துறை அமைக்க வேண்டும்” என்றும், “முதல்வர் மு.க.ஸ்டாலின், மீனவர்களுடன் ஒரு சந்திப்பு நடத்த வேண்டும்” என்றும் ராமேஸ்வரத்தில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி பேசியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது மாவட்ட மாநாடு இரண்டு நாள்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு கமுதி, முதுகுளத்தூர், கடலாடி, திருவாடனை, ஆர்.எஸ். மங்கலம், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி ஆகியோர் கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பித்தனர். அதன் பின்னர் அவர் பேட்டி அளித்தபோது, “ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் விளைவிக்கக்கூடிய பொருட்கள் அனைத்துக்கும் நியாயமான ஒரு விலை கிடைப்பதென்பது, ஒவ்வொரு ஆண்டும் சிரமமாக இருக்கிறது. இதனை மாநில அரசு கருத்தில்கொண்டு, ஒரு தீர்வுக்கு கொண்டு வரவேண்டும்.
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் சுமார் 8 லட்சம் மீனவர்கள் இருக்கிறார்கள். சமீபகாலமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விவசாயிகள், சாதாரண எளிய மக்கள், மலைவாழ் மக்களுடன் நேரடியாக அவருடைய வீட்டுக்கு சென்று பிரச்னையை கேட்டு அறிந்து வருகிறார். அதுபோல் முதல்வர் இந்த மீனவர்களின் பிரச்சனையை அறியும் வகையில் மீனவர்களுடன் ஒரு சந்திப்பு நடத்தினால் உபயோகமாக இருக்கும் என நான் கருதுகிறேன்.
கடந்த 2014ஆம் ஆண்டு ஒன்றிய பாஜக அரசு மீனவர்களுக்கு என்று தனித்துறை அமைக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார்கள். ஆனால் அதனை ஏற்படுத்தவில்லை. அதனை ஏற்படுத்த வேண்டுமென அவர்களை தொடர்ந்து வலியுறுத்த விரும்புகிறோம்.
கோவையில் பள்ளி மாணவி பாலியல் தொந்தரவால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கும் செய்தியை அறிந்தேன். தான் படிக்கக்கூடிய பள்ளிக்கூடத்திலிருந்து உயர்ந்த இடத்தில் இருக்கக்கூடிய ஆசிரியரிடமிருந்து பாலியல் தொந்தரவு வருகிறபோது, அந்தப் பள்ளி மாணவிக்கு என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு திகைப்பை, அதிர்ச்சியை, மன வலியை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் போக்சோ சட்டத்தின்படி பள்ளியின் முதல்வர், ஆசிரியர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
தொடர்புடைய செய்தி: கோவை மாணவி தற்கொலை: பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனிடம் விசாரணை
பள்ளியின் உரிமையாளர் மீதும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய மாதர் சங்கம் வலியுறுத்தி இருக்கிறார்கள். அதனை மாநில அரசு கவனிக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளிக்கல்வித்துறைக்கு என்று விசாகா கமிட்டி அமைக்கப்பட வேண்டும். அதில் அதிகாரி மட்டுமில்லாமல் MSW படித்து இருக்க கூடிய, அதில் பயிற்சி பெற்றிருக்கக்கூடிய ஒரு சமூக சேவகராக ஒரு பெண்ணை நியமிக்க வேண்டும். அப்படி நியமிக்கப்படும் போது மாணவிகளும், பெண் ஆசிரியர்களும் சொல்ல முடியாததை அந்தக் கவுசிலிங் அமைப்புகள் சொல்ல முடியும்.
மற்ற துறைகளைவிடவும் கல்வித்துறையில் இளம் குழந்தைகள், பெண் ஆசிரியர் பாதிக்கப்படும்போது அது சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஆகவே இந்தத் துறையை முக்கியமான துறையாக கருதி, இதில் வரக்கூடிய பாலியல் பிரச்சனைகளை கட்டுப்படுத்துவதற்கு குறைப்பதற்கு ஆண் பெண் சமத்துவம் என்ற அரசியல் கோட்பாட்டை கொண்டு செல்வதற்கு அரசு தரப்பில் சமூக நலத்துறை, கல்வித்துறை இணைந்து ஒரு முயற்சி எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்