சென்னை தலைமைச் செயலக கோட்டைக் கொத்தளத்தில் சுதந்திர தின விழாவில் கலைநிகழ்ச்சிகள் தவிர்க்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.
ஆகஸ்ட் 15ஆம் தேதி கொத்தளத்தில் காலை 9 மணிக்கு தேசியக்கொடியை முதல்வர் ஸ்டாலின் ஏற்றி வைக்கிறார். கொரோனா தொற்றால் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு பள்ளிக் குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் நிகழ்த்தும் கலை நிகழ்ச்சிகள் தவிர்க்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் சுதந்திர தின நிகழ்ச்சிகள் தொலைக்காட்சி மற்றும் வானொலியில் ஒளி/ஒலிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் சுதந்திர போராட்ட வீரர்களின் வீடுகளுக்கே சென்று உரிய மரியாதை செலுத்தவும் ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டும் கொரோனா முதல் அலையின் தாக்கத்தை கருத்தில்கொண்டு கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்