ப்ரிதிவ் ராஜ், ரோஷன் மேத்யூ, மம்முகோயா உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் 'குருதி'. அமேசான் ப்ரைமில் வெளியாகியிருக்கும் இந்த மலையாள திரைப்படம் சிறிய மலைக்கிராமத்தில் நான்கைந்து மனிதர்களைக் கொண்டு இருவேறு மதநம்பிக்கைகள் குறித்து விசாரிக்கிறது.
கேரள மலைக்கிராமமொன்றில் தனது தம்பி மற்றும் தந்தையுடன் வசிக்கிறார் இப்ராஹிமாக வரும் ரோஷன் மேத்யூ. அருகிலிருக்கும் வீட்டில் வசிக்கிறார்கள் சுமதியாக வரும் ஸ்ரீண்டாவும், அவரது சகோதரரும். இந்து மற்றும் முஸ்லிம் மதங்களைப் பின்பற்றும் இவ்விரு குடும்பங்களையும் ஓர் இயற்கை பேரிடர் இணைத்திருந்தது. இயற்கை பேரழிவில் தனது மனைவி மற்றும் குழந்தையினை இழந்த இப்ரஹிமின், குடும்பத்திற்கு உதவியாக இருக்கிறார் சுமதி. இந்த அன்பின் நூல், சித்தாந்தங்களால் அறுபடும் இடங்களைக் கொண்டு திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது.
இஸ்லாமிய வியாபாரியொருவரை கொலை செய்த இந்து குற்றவாளியொருவனோடு ஓர் இரவில் தற்செயலாக இம்ராஹிமின் வீட்டிற்குள் நுழைகிறார் ஒரு காவல் துறை அதிகாரி. அதன் பிறகு அந்த இரவில் நடந்த ரத்தமும் சதையுமான வன்முறைக் காட்சிகளும் மத நம்பிக்கை சார்ந்த விவாதங்களுமே எல்லாம்.
கொலைக்குப் பழிவாங்க இப்ராஹிமின் வீட்டிற்குள் நுழையும் ப்ரிதிவ் ராஜ் கதாபாத்திரம் இறுதி காட்சி வரை பழியுணர்ச்சியின் அடர்த்தி குறையாமல் நகர்த்தப்பட்டிருக்கிறது. இக்கதையில் ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்த கவனத்தோடு எழுதப்பட்டிருக்கிறது. இறப்பதற்கு முன் இப்ராஹிமின் கையில் பொறுப்பொன்றை கொடுக்கிறார் காவல்துறை அதிகாரி. அந்தப் பொறுப்புக்கும் சொந்த சித்தாந்தத்திற்கும் இடையில் ஊசலாடுகிறது ரோஷன் மேத்யூவின் கதாபாத்திரம்.
என்ன தான் அண்டை வீட்டாரோடு அன்புடன் இருக்கும் கதாபாத்திரமாக சுமதி இருந்தாலும் அவளுக்குள்ளும் தன் சொந்த மத அபிமானம் ஒளிந்திருக்கிறது. அது அந்த இரவில் குரூரமாக வெளிப்படுகிறது. மனைவியை இழந்த இப்ராஹிம் தன்னை திருமணம் செய்து கொள்ளத் தயங்குவதற்குப் பின்னே இப்ராஹிமின் மத நம்பிக்கை படர்ந்திருப்பதை சுட்டிக் காட்டுகிறது சுமதியின் கதாபாத்திரம். இப்ராஹிமின் தம்பியாக வரும் ரசூல் தன் நடிப்பால் அசத்தியிருக்கிறார்.
அனிஷ் பல்யா கதை, திரைக்கதை எழுதி இருக்கும் இப்படத்தை மனு வாரியார் இயக்கி இருக்கிறார். படத்தின் பெரிய பலமாக அனிஷ் பல்யாவின் வசனங்களைச் சொல்லலாம். மம்முகோயா வழியாக பேசப்படும் வசனங்கள் அருமை. “இந்த உலகம் வெறுப்பால் உருவானது. உலகின் முதல் மனிதனின் வெறுப்பு, அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட்டது” எனப் பேசுகிறது அக்கதாபாத்திரம். மேலும், மனிதனது குணமே ஏதோ ஒன்றை வெறுப்பது என்பது பல இடங்களில் சுட்டிக் காட்டப்படுகிறது.
படத்தின் பெரும் பகுதி காட்சிகள் இரவில் படமாக்கப்பட்டிருக்கிறது. அபினந்தன் ராமானுஜம் தன் ஒளிப்பதிவால் 'குருதி'யை சிறப்பாக படமாக்கி இருக்கிறார். ஜாக்ஸ் பேஜோயின் பின்னனி இசை நன்றாக அமைந்திருக்கிறது. இரு வேறு சித்தாந்தங்கள் குறித்த விவாதங்களை வன்முறைகளின் பின்னணியில் பேசியிருப்பது புதிது. ஆனால் இயக்குநர் இவ்விரு சித்தாந்தங்களையும் சமமாக கையாண்டிருக்கிறாரா என்றால், அது பார்வையாளர்களின் உள்வாங்கும் தன்மையைப் பொறுத்ததே.
எது எப்படி இருந்தாலும் சரி... இந்த மத சித்தாந்தங்களின் பலனாக விரயமாவது எது என்பதை அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுதான் 'குருதி'.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்