சாதிய ரீதியாக விமர்சிக்கப்பட்ட இந்திய அணியின் ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியாவை மதுரை எம்.பி. சு.வெங்கேடசன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
அண்மையில் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் அரையிறுதி வரை முன்னேறியதன் மூலம் இந்திய மகளிர் ஹாக்கி அணி பெரிதும் பேசப்பட்டது. அரையிறுதி தோல்விக்கு காரணம் ஹாக்கி அணியில் பட்டியலினத்தவர்கள் அதிகம் இருப்பதுதான் எனக் கூறி, வீராங்கனை வந்தனா கட்டாரியா வீட்டின் முன் சாதி ரீதியாக பேசி சிலர் இழிவுபடுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் உள்ள வந்தனா கட்டாரியாவின் இல்லத்திற்கு சென்ற மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், அவரை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தார். வந்தனா கட்டாரியாவின் ஹாட்ரிக் கோலை நினைவு கூர்ந்த சு.வெங்கடேசன், வந்தனா இன்னும் பெரிய உச்சங்களை தொடுவார் என வாழ்த்தினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3CLwJATசாதிய ரீதியாக விமர்சிக்கப்பட்ட இந்திய அணியின் ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியாவை மதுரை எம்.பி. சு.வெங்கேடசன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
அண்மையில் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் அரையிறுதி வரை முன்னேறியதன் மூலம் இந்திய மகளிர் ஹாக்கி அணி பெரிதும் பேசப்பட்டது. அரையிறுதி தோல்விக்கு காரணம் ஹாக்கி அணியில் பட்டியலினத்தவர்கள் அதிகம் இருப்பதுதான் எனக் கூறி, வீராங்கனை வந்தனா கட்டாரியா வீட்டின் முன் சாதி ரீதியாக பேசி சிலர் இழிவுபடுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் உள்ள வந்தனா கட்டாரியாவின் இல்லத்திற்கு சென்ற மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், அவரை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தார். வந்தனா கட்டாரியாவின் ஹாட்ரிக் கோலை நினைவு கூர்ந்த சு.வெங்கடேசன், வந்தனா இன்னும் பெரிய உச்சங்களை தொடுவார் என வாழ்த்தினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்