தமிழக சட்டப்பேரவை தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வருகிறார்.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அக்கட்சியின் தமிழகத் தலைவர் எல்.முருகன் தாராபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் தாராபுரம் தொகுதியில் நடைபெறும் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, அத்தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு திரட்டுகிறார். இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பங்கேற்கிறார்.
இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று காலை கோவை விமான நிலையம் வரும் பிரதமர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் கேரள மாநிலம் பாலக்காடு சென்று பரப்புரை மேற்கொள்கிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் தாராபுரம் வரும் பிரதமர் 12.50 மணி முதல் 1.35 மணி வரை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். பிரதமரின் வருகை ஒட்டி தாராபுரத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துறை செய்துள்ளது.
தாராபுரம் பரப்புரையை முடித்துக்கொண்டு புதுச்சேரி செல்லும் பிரதமர் மாலை 4.30 மணியளவில் அங்கு நடைபெறும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார். பிரதமரை தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் தமிழகம் வர உள்ளனர். காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியை தொடர்ந்து பிரியங்காவும் பரப்புரை மேற்கொள்ள தமிழகம் வர உள்ளார்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3wajC8Oதமிழக சட்டப்பேரவை தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வருகிறார்.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அக்கட்சியின் தமிழகத் தலைவர் எல்.முருகன் தாராபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் தாராபுரம் தொகுதியில் நடைபெறும் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, அத்தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு திரட்டுகிறார். இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பங்கேற்கிறார்.
இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று காலை கோவை விமான நிலையம் வரும் பிரதமர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் கேரள மாநிலம் பாலக்காடு சென்று பரப்புரை மேற்கொள்கிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் தாராபுரம் வரும் பிரதமர் 12.50 மணி முதல் 1.35 மணி வரை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். பிரதமரின் வருகை ஒட்டி தாராபுரத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துறை செய்துள்ளது.
தாராபுரம் பரப்புரையை முடித்துக்கொண்டு புதுச்சேரி செல்லும் பிரதமர் மாலை 4.30 மணியளவில் அங்கு நடைபெறும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார். பிரதமரை தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் தமிழகம் வர உள்ளனர். காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியை தொடர்ந்து பிரியங்காவும் பரப்புரை மேற்கொள்ள தமிழகம் வர உள்ளார்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்