தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சாதனைகள் மற்றும் திட்டங்களுக்கு பதில் அனுதாபம் மூலம் வாக்குகளை பெறும் பிரச்சார யுக்திகளை தமிழக அரசியல் கட்சிகள் கையாள தொடங்கியுள்ளன.
தேர்தல் என்றாலே அனைவரது ஞாபகத்திற்கு வருவது வேட்பாளர்களின் பிரச்சாரங்கள் தான். கட்சியின் தலைவர்கள் தொடங்கி அடிமட்ட தொண்டன் வரையிலான பிரச்சாரங்கள் இன்றைய காலக்கட்டத்தில் பல்வேறு வடிவங்களை பெற்றுள்ளது என்றால் மிகையல்ல.
கட்சி சார்ந்து தங்களது ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், தேர்தல் அறிக்கைகளில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை கூறி பிரச்சாரம் செய்வது ஒரு ரகம். அதே நேரத்தில் இன்றைய சூழலில் விலைவாசி உயர்வு, அடிப்படை பிரச்சனைகளை மையப்படுத்தி வாக்கு சேகரிப்பது மற்றொரு ரகம். இவை அனைத்தும் தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சார களத்தில் இடம்பெற்றிருந்தாலும், கவர்ச்சிகரமாகவும், அனுதாபங்கள் மூலம் வாக்குகளை பெறும் பிரச்சார யுக்திகளை தமிழக அரசியல் கட்சிகள் கையாள தொடங்கியுள்ளன.
தமிழக பிரச்சார களத்தில் வேட்பாளர்களின் ஒவ்வொரு செயல்களும் வேடிக்கையாக மாற தொடங்கிவிட்டன. டீ கடைக்கு சென்று டீ போடுவது, ஹோட்டல்களில் தோசை சுடுவது, வாக்காளர்களின் துணிகளை துவைத்து கொடுப்பது, நாடக கலைஞர்களுடன் இணைந்து நடனமாடுவது என தொகுதிக்கு ஏற்றாற்போல பிரச்சாரங்கள் மாறுபடுகின்றன.
'பிரலமான தலைவர்கள் இல்லாத தேர்தல் என்பதால் இவை அனைத்தும் வாக்காளர்களை தங்களை நோக்கி திருப்ப முயற்சிக்கும் வித்தைகள்' என்கிறார் மூத்த பத்திரிகையாளர் டி ராமகிருஷ்ணன்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3u94I0Gதமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சாதனைகள் மற்றும் திட்டங்களுக்கு பதில் அனுதாபம் மூலம் வாக்குகளை பெறும் பிரச்சார யுக்திகளை தமிழக அரசியல் கட்சிகள் கையாள தொடங்கியுள்ளன.
தேர்தல் என்றாலே அனைவரது ஞாபகத்திற்கு வருவது வேட்பாளர்களின் பிரச்சாரங்கள் தான். கட்சியின் தலைவர்கள் தொடங்கி அடிமட்ட தொண்டன் வரையிலான பிரச்சாரங்கள் இன்றைய காலக்கட்டத்தில் பல்வேறு வடிவங்களை பெற்றுள்ளது என்றால் மிகையல்ல.
கட்சி சார்ந்து தங்களது ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், தேர்தல் அறிக்கைகளில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை கூறி பிரச்சாரம் செய்வது ஒரு ரகம். அதே நேரத்தில் இன்றைய சூழலில் விலைவாசி உயர்வு, அடிப்படை பிரச்சனைகளை மையப்படுத்தி வாக்கு சேகரிப்பது மற்றொரு ரகம். இவை அனைத்தும் தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சார களத்தில் இடம்பெற்றிருந்தாலும், கவர்ச்சிகரமாகவும், அனுதாபங்கள் மூலம் வாக்குகளை பெறும் பிரச்சார யுக்திகளை தமிழக அரசியல் கட்சிகள் கையாள தொடங்கியுள்ளன.
தமிழக பிரச்சார களத்தில் வேட்பாளர்களின் ஒவ்வொரு செயல்களும் வேடிக்கையாக மாற தொடங்கிவிட்டன. டீ கடைக்கு சென்று டீ போடுவது, ஹோட்டல்களில் தோசை சுடுவது, வாக்காளர்களின் துணிகளை துவைத்து கொடுப்பது, நாடக கலைஞர்களுடன் இணைந்து நடனமாடுவது என தொகுதிக்கு ஏற்றாற்போல பிரச்சாரங்கள் மாறுபடுகின்றன.
'பிரலமான தலைவர்கள் இல்லாத தேர்தல் என்பதால் இவை அனைத்தும் வாக்காளர்களை தங்களை நோக்கி திருப்ப முயற்சிக்கும் வித்தைகள்' என்கிறார் மூத்த பத்திரிகையாளர் டி ராமகிருஷ்ணன்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்