இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவை பாக்சிங் டே டெஸ்டில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது. அடிலெய்டில் வாங்கிய உதையை ஆஸ்திரேலியாவுக்கே திருப்பி கொடுத்துள்ளது ரஹானே படை. இந்த வெற்றியை சமூக வலைத்தளங்களில் முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் பாராட்டி போஸ்ட் செய்து வருகின்றனர்.
Thanks da thambi!! Nee illanu oru chinna varutham!! Take care !! https://t.co/T3nbJwehov
— Ashwin ?? (@ashwinravi99) December 29, 2020
அந்த வகையில் எலும்பு முறிவு காரணமாக இந்திய அணியிலிருந்து விலகியுள்ள வேகப்பந்து வீச்சாளர் ஷமியும் ட்விட்டரில் இந்திய அணிக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து இருந்தார். “சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினீர்கள். வாழ்த்துகள் பாய்ஸ். கேப்டன் ரஹானே, பும்ரா, உமேஷ் யாதவ், அஷ்வின், ஜடேஜா என அனைவரும் சிறப்பாக விளையாடினீர்கள். அடுத்த ஆட்டத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளேன். மகிழ்ச்சி” என அஷ்வினையும் தனது ட்விட்டர் போஸ்டில் டேக் செய்திருந்தார்.
அதை கவனித்த அஷ்வின், “நன்றி தம்பி. நீ இல்லன்னு சின்ன வருத்தம். டேக் கேர்” என அந்த ட்வீட்டுக்கு பதில் கொடுத்திருந்தார். அதை கவனித்த ரசிகர் ஒருவர் ‘தம்பி?’ என்பதை ஹைலைட் செய்து அஷ்வினின் போஸ்ட்டுக்கு ரீட்வீட் போட்டிருந்தார்.
அதை அலசியதில் அஷ்வினும், ஷமியும் தமிழில் பேசிக் கொள்வார்கள் என்பது தெரியவந்துள்ளது. இதை அஷ்வின் ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளார்.
“அது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் ஆட்டம். அவர்கள் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி விளையாடியது. அவர்களை விரைந்து ஆல் அவுட் செய்து, குறைந்த டார்கெட்டை சேஸ் செய்து ஆட்டத்தில் வெற்றிபெற நினைத்தோம். அப்போது ஷமி பந்து வீசினார். எதிர்முனையில் இருந்த பேட்ஸ்மேன் அவரது பந்தை பவுண்டரிகளுக்கு விரட்டினார். அசதியில் ஷமியை திட்டினேன். அது அவரது காதுகளில் விழுந்து விட்டது. அவர் உடனே என்ன என என்னிடம் கேட்டார்.
நான் விவரத்தை சொன்னேன். தமிழில் உன்னை திட்டினேன் என்றேன். அவ்வளவு தான் அடுத்த பந்திலேயே அந்த பேட்ஸ்மேனின் விக்கெட்டை வீழ்த்தினார். அப்போதிலிருந்தே அவருடன் தமிழில் பேசும் போதெல்லாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இது ஐபிஎல் போட்டிகளிலும் எதிரொலித்தது” என அஷ்வின் சொல்லியுள்ளார்.
முகமது ஷமி உத்திர பிரதேசத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி : WTD
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்