Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

இனி நான் அரசியலில் ஈடுபட மாட்டேன்: தமிழருவி மணியன்

‘கட்சி தொடங்கப்போவதில்லை’ என நடிகர் ரஜினிகாந்த் நேற்று அறிவித்த நிலையில், இனி நான் அரசியலில் ஈடுபட மாட்டேன் என தமிழருவி மணியன் இன்று அறிவித்தார்.

வரும் ஜனவரியில் கட்சி ஆரம்பிப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் முன்னர் அறிவித்திருந்த நிலையில் திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றி ‘இனி கட்சி ஆரம்பிக்கப்போவதில்லை’ என நேற்று அறிவித்தார். முன்னதாக அவர் கட்சி ஆரம்பிப்பேன் என அறிவித்த நாளிலேயே, தமிழருவி மணியனை தனது கட்சியின் மேற்பார்வையாளராக நடிகர் ரஜினிகாந்த் நியமனம் செய்தார்.

இந்நிலையில் ‘கட்சி தொடங்கப்போவதில்லை’ என நடிகர் ரஜினிகாந்த் நேற்று அறிவித்த நிலையில், இனி நான் அரசியலில் ஈடுபட மாட்டேன் என தமிழருவி மணியன் இன்று தெரிவித்தார்.

image

இதுதொடர்பாக அவர், “ இறப்பு என்னை தழுவும் வரை இனி நான் அரசியலில் ஈடபட மாட்டேன். என் நேர்மை, தூய்மை, ஒழுக்கம் போற்றப்படாத அரசியல் களத்தில் விலகி நிற்பதே விவேகமானது. மாணிக்கத்திற்கும் கூலாங் கற்களுக்கும் பேதம் தெரியாத உலகில் இனி நான் சாதிக்க ஒன்றும் இல்லை.

2 திராவிடக் கட்சிகளால் தமிழகத்தின் பொதுவாழ்க்கை பண்புகள் பாழடைந்துவிட்டன. மக்கள் நலன் சார்ந்த மேன்மையான மாற்று அரசியல் இந்த மண்ணில் மலர வேண்டும் என கனவு கண்டேன். திமுகவில் இருந்து விலகும்போது கண்ணதாசன் போய் வருகிறேன் என்றார். நான் போகிறேன்; வரமாட்டேன்”என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/2WRzsoF

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்