"மக்களுக்கு நல்லது அதிமுகவுக்குதான் ரஜினி ஆதரவளிப்பார்” என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
கட்சி தொடங்கப்போவதில்லை என்று ரஜினி அறிவித்துள்ளது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, "எல்லா கட்சித் தலைவர்களையும் காப்பாற்ற வேண்டும். அதுதான் பண்பாடு. எனவே, அவருடைய உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர் முடிவெடுக்கும்போது, அவர் நீண்ட ஆயுலோடு வாழ்ந்து, என்றும்போல் அவர் தமிழக மக்களுக்கு தொடர்ந்து தொண்டாற்ற வேண்டும்.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக அங்கம் வகிக்கிறது. ஆனால் கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற நிலையில், அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். அதை ஏற்றுக் கொள்ளக்கூடிய கட்சிகளுடன்தான் எங்களுடைய கூட்டணி என்ற நிலையை தெளிவுபடுத்தி இருக்கின்றோம்.
எங்களது கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக, தமாக, உட்பட இன்னும் பல கட்சிகள் இருக்கின்றன. எல்லோரும் முதலமைச்சர் வேட்பாளரை ஏற்றுக் கொள்ளும் நிலையில்தான் இருக்கிறார்கள். அதில் யாருக்கும் மாறுபட்ட கருத்தில்லை.
மக்களுக்கு யார் நல்லது செய்தாலும் அதை ஆதரிப்பவர் ரஜினி. அந்த வகையில் மக்களுக்கு நல்லது செய்யும் அம்மாவின் அரசுக்கு அவரது ஆதரவு நிச்சயமாக இருக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. திமுக ஆட்சியில் திரைப்படத்துறை எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டது என்று ரஜினிக்கு நன்றாக தெரியும். அப்படி இருக்கும்போது ரஜினி அவர்களுக்கு நிச்சயமாக ஆதரவு கொடுக்கமாட்டார்.
ரஜினி எதிர்காலத்தில் ஆதரவு என்று ஒன்று கொடுத்தால் அது நிச்சயமாக அதிமுகவுக்குத்தான் கொடுப்பார். ஏனென்றால், நாங்கள்தான் நல்லது செய்கிறோம். அதனால் வரும்காலத்தில் அவருடைய ஆதரவு எங்களுக்கு இருக்கும் என்று நம்புகிறோம்.
ரஜினியிடம் ஆதரவு கேட்பது என்பது கட்சியின் கொள்கை முடிவு. தனி நபராக நான் முடிவெடுக்க முடியாது. எங்கள் கட்சிதான் முடிவெடுத்து அறிவிக்கும். அதற்கு இன்னும் காலம் இருக்கிறது.
சிஸ்டம் சரியில்லை என்று ரஜினி எங்கள் ஆட்சியை குறை சொல்லவில்லை. பொத்தாம் பொதுவாக சிஸ்டம் சரியில்லை என்றுதான் சொன்னார். எங்கள் ஆட்சி சரியில்லை, எங்கள் நிர்வாகம் சரியில்லை, என்றெல்லாம் அவர் சொல்லவில்லை. அவர் எப்போதும் அம்மாவின் அரசை குற்றம் சொல்லவில்லை. எனவே, அதுக்கும் இதுக்கும் நீங்கள் முடுச்சுபோட வேண்டாம். நல்லது பண்ணுபவர்களுக்குத்தான் நாங்கள் ஆதரவு கொடுப்போம். அதேபோல நாங்கள் நல்லது செய்கிறோம். அதனால் ரஜினி எங்களுக்கு ஆதரவு அளிப்பார்.
திமுகவை பொறுத்தவரை, தேய்பிறை போல் வளர்ச்சி இல்லாமல் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. தமிழக மக்கள் ரொம்ப விபராக இருக்கிறார்கள். மக்கள் தான் நீதிபதிகள் அவர்கள் அரசை சீர்தூக்கி பார்த்து சிறப்பாக ஆட்சி செய்யும் அதிமுகவைத்தான் ஆதரிப்பார்கள்.
தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கும் நிலையில் பரப்புரையை தொடங்கிவிட்டோம். தலைமை கழகத்தால் பல குழுக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கூட்டணி கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 2021ல் மெகா கூட்டணி அமைத்து அதிமுக கூட்டணி மிகப்பெரிய இமாலய வெற்றியை பெறும்.
புரட்சித்தலைவர் தங்கம். மீதியெல்லாம் தகரடப்பா, அதனால் தகரடப்பா தங்கததை குறை சொல்லக்கூடாது. லஞ்சம் கொடுப்பதும் குற்றம் லஞ்சம் வாங்குவதும் குற்றம். லஞ்சம் கொடுப்பதில்லை என மக்கள் தீர்மானமாக இருந்தால், லஞ்சம் எவனுமே வாங்கமாட்டான். எந்த நிலையிலும் லஞ்சம் தலைதூக்கக் கூடாது.
நடிகர் விஜய் மரியாதை நிமித்தமாகத்தான் முதல்வரை சந்தித்தார். இதில் வேறு எந்த காரணமும் இல்லை” என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்