Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

புரெவி புயல்: வேதாரண்யத்தில் பலத்த காற்றுடன் கனமழை; இயல்பு வாழ்க்கை முடக்கம்

புரெவி புயல் காரணமாக, வேதாரண்யம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. வேதாரண்யததில் 19 செ.மீ மழை பதிவாகியுள்ள நிலையில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

image
நாகை மாவட்டம் வேதாரண்யம், கோடியக்கரை, ஆயக்காரன்புலம், தலைஞாயிறு, தாணிக்கோட்டம், கரியாப்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக பலத்தக் காற்றுடன் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டத்தில் அதிகபட்சமாக வேதாரண்யத்தில் 19 செ.மீ மழையும், தலைஞாயிறில் 14 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.

புரெவி புயலின் தாக்கத்தால் பெய்துவரும் கனமழையால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. காலையிலிருந்து தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.

image

வேதாரண்யம் கடற்பகுதியில் பலத்த காற்றுடன் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுவதால் மீன்வளத் துறையின் எச்சரிக்கைகையை அடுத்து ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 15 கிராமங்களைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் 1,100 பைபர் படகுகள், 75 விசைப்படகுகளை மீனவர்கள் பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர்.

இதனிடையே, வானிலை மையம் கணித்தபடி நேற்றிரவு இலங்கையின் திரிகோணமலை அருகே புரெவி புயல் கரையைக் கடந்தது. இன்று அதிகாலை நிலவரப்படி, பாம்பனுக்கு 90 கி.மீ தொலைவில் இருக்கும் புரெவி புயல், பாம்பனுக்கும் கன்னியாகுமரிக்கும் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/2JF8zki

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்