Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

புரெவி புயல்: ராமேஸ்வரத்தில் கனமழை; நங்கூரத்தை அறுத்து கரை ஒதுங்கிய விசைப்படகுகள்!

புரெவி புயல் காரணமாக, ராமேஸ்வரத்தில் கனமழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால், பொதுமக்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

image

புரெவி புயல் காரணமாக தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக தனுஷ்கோடியில் கடல் அலையில் சிக்கி, புதிதாக போடப்பட்ட சாலை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், அரிச்சல்முனையில் உள்ள வளைவு, கடலரிப்பு ஏற்பட்டு கடலுக்குள் இழுத்துச் சென்றுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் பெய்துவரும் கனமழை காரணமாக தனுஷ்கோடி பகுதியில் வசித்து வந்த மீனவர்களை மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்க ஏற்பாடு செய்துள்ளது.

பாம்பன், ராமேஸ்வரம் பகுதியில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக மழைநீர் சூழ்ந்ததால் அங்கு வசிக்கும் மக்களை மாவட்ட நிர்வாகம் காப்பகங்கள், திருமண மண்டபங்களில் தங்கவைக்க ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

image

கடந்த 2 நாள்களுக்கு முன்பு விசை படகுகளை பாதுகாப்பாக நிறுத்தும் பொருட்டு , வடக்கு கடற்கரையிலிருந்து பாம்பன் பாலம் வழியாக தெற்கு குந்துகால் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டன. சில விசைப்படகுகள் நேற்றிரவு வீசிய சூறைக்காற்று காரணமாக நங்கூரத்தை அறுத்து கரை ஒதுங்கின. இதனால் மீனவர்களுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து மழை தீவிரமடைந்து வருவதால் ராமேஸ்வரத்தில் நேற்று நள்ளிரவு முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆங்காங்கே மரங்களும் சாய்ந்துள்ளன. தொடர் கனமழை பெய்து வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இதனிடையே, வானிலை மையம் கணித்தபடியே நேற்றிரவு இலங்கையின் திரிகோணமலை அருகே புரெவி கரையைக் கடந்தது. இன்று அதிகாலை நிலவரப்படி, பாம்பனுக்கு 90 கி.மீ தொலைவில் இருக்கும் புரெவி புயல், பாம்பனுக்கும் கன்னியாகுமரிக்கும் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/2JDgyOP

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்