வங்கக் கடலில் உருவான புரெவி புயல் திரிகோணமலையில் கரையை கடந்து தற்போது பாம்பனுக்கு கிழக்கே 90 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது. பாம்பன் - கன்னியாகுமரி இடையே புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த லைவ் அப்டேட்ஸ் இங்கு காணலாம்...
டிச.03, காலை 10.49 மணி: புரெவி புயலையொட்டி தமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். முதல்வர் பழனிசாமியிடம் போனில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கேட்டறிந்த அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.
டிச.03, காலை 10.35 மணி: புரெவி புயல் காரணமாக, வேதாரண்யம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. வேதாரண்யததில் 19 செ.மீ மழை பதிவாகியுள்ள நிலையில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. > விரிவாக வாசிக்க > புரெவி புயல்: வேதாரண்யத்தில் பலத்த காற்றுடன் கனமழை; இயல்பு வாழ்க்கை முடக்கம்
டிச.03, காலை 10.25 மணி: திருவள்ளூர் ஆரணியாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிச்சாட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 3000 கன அடி நீர் திறக்கப்பட உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி உள்ளிட்ட கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டிச.03, காலை 10.00 மணி: சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மதியம் 12 மணிக்கு மீண்டும் நீர் திறக்கப்படுகிறது. ஏரிக்கு நீர் வரத்து 3000 கன அடியாக உயர்ந்ததால் இன்று முதல் கட்டமாக 1000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவான 23.5 அடியில் 22.15 அடி நீர் உள்ளதால் நீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் மீனவ கிராமத்தில் இருந்து... - புதிய தலைமுறை ஃபேஸ்புக் நேரலை:
முந்தையச் செய்திகள்:
> புரெவி புயலின் எதிரொலியால், தென் தமிழகத்தின் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதுதொடர்பான விரிவான செய்திக்கு > பாம்பனுக்கு மிக அருகில் ‘புரெவி‘ புயல்... கொட்டும் மழை; தயார் நிலையில் தென் தமிழகம்!
> புரெவி புயலின் தாக்கம் காரணமாக, சென்னையிலும் அதன் சுற்றுப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. - விரிவாக வாசிக்க > புரெவி புயல்: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய மழை!
> புரெவி புயல் - பாம்பனில் பலத்த காற்றுடன் கனமழை!
> புரெவி புயல்: தயார் நிலையில் தூத்துக்குடி மாவட்டம்...
> புரெவி புயலால் திருத்துறைப்பூண்டியில் 13 செ.மீ. அளவுக்கு கனமழை | நேரடி தகவல்
> புயல் பாதிப்பு - வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை!
> பாம்பனுக்கு மிக அருகில் புரெவி புயல் - தென்மாவட்டங்களின் தற்போதைய நிலவரம் என்ன?
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3g4vn9uவங்கக் கடலில் உருவான புரெவி புயல் திரிகோணமலையில் கரையை கடந்து தற்போது பாம்பனுக்கு கிழக்கே 90 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது. பாம்பன் - கன்னியாகுமரி இடையே புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த லைவ் அப்டேட்ஸ் இங்கு காணலாம்...
டிச.03, காலை 10.49 மணி: புரெவி புயலையொட்டி தமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். முதல்வர் பழனிசாமியிடம் போனில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கேட்டறிந்த அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.
டிச.03, காலை 10.35 மணி: புரெவி புயல் காரணமாக, வேதாரண்யம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. வேதாரண்யததில் 19 செ.மீ மழை பதிவாகியுள்ள நிலையில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. > விரிவாக வாசிக்க > புரெவி புயல்: வேதாரண்யத்தில் பலத்த காற்றுடன் கனமழை; இயல்பு வாழ்க்கை முடக்கம்
டிச.03, காலை 10.25 மணி: திருவள்ளூர் ஆரணியாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிச்சாட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 3000 கன அடி நீர் திறக்கப்பட உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி உள்ளிட்ட கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டிச.03, காலை 10.00 மணி: சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மதியம் 12 மணிக்கு மீண்டும் நீர் திறக்கப்படுகிறது. ஏரிக்கு நீர் வரத்து 3000 கன அடியாக உயர்ந்ததால் இன்று முதல் கட்டமாக 1000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவான 23.5 அடியில் 22.15 அடி நீர் உள்ளதால் நீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் மீனவ கிராமத்தில் இருந்து... - புதிய தலைமுறை ஃபேஸ்புக் நேரலை:
முந்தையச் செய்திகள்:
> புரெவி புயலின் எதிரொலியால், தென் தமிழகத்தின் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதுதொடர்பான விரிவான செய்திக்கு > பாம்பனுக்கு மிக அருகில் ‘புரெவி‘ புயல்... கொட்டும் மழை; தயார் நிலையில் தென் தமிழகம்!
> புரெவி புயலின் தாக்கம் காரணமாக, சென்னையிலும் அதன் சுற்றுப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. - விரிவாக வாசிக்க > புரெவி புயல்: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய மழை!
> புரெவி புயல் - பாம்பனில் பலத்த காற்றுடன் கனமழை!
> புரெவி புயல்: தயார் நிலையில் தூத்துக்குடி மாவட்டம்...
> புரெவி புயலால் திருத்துறைப்பூண்டியில் 13 செ.மீ. அளவுக்கு கனமழை | நேரடி தகவல்
> புயல் பாதிப்பு - வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை!
> பாம்பனுக்கு மிக அருகில் புரெவி புயல் - தென்மாவட்டங்களின் தற்போதைய நிலவரம் என்ன?
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்