சாலையில் இருந்த பள்ளத்தில் விடாமல் காரை திருப்ப முற்பட்ட போதுதான் விபத்து ஏற்பட்டது என ரிஷப் பண்ட் கூறியதாக டெல்லி கிரிக்கெட் அசோசியேஷன் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிகெட் வீரர் ரிஷப் பண்ட் ஓட்டி வந்த கார் கடந்த வியாழக்கிழமை அதிகாலை விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் ரிஷப்புக்கு அதிக அளவில் காயங்கள் ஏற்பட்ட போதிலும், நல்வாய்ப்பாக உயிருக்கு ஆபத்தான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. இதையடுத்து ரிஷப் பண்ட் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு சிறிய அளவிலான பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. ரிஷப் பண்டின் உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகிறார்கள். அவரது உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மதுபோதையில் இருந்தாரா?
இதற்கிடையே இந்த விபத்து குறித்த விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதலில் ரிஷப் பண்ட் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக தகவல் பரவியது. இருப்பினும், இதைத் திட்டவட்டமாக மறுத்த போலீசார், ரிஷப் பண்ட் டெல்லியில் இருந்து 200 கிமீ தூரம் சரியாக ஓட்டி வந்துள்ளார். மது குடித்திருந்தால் இத்தனை தொலைவு எப்படி சரியாக வாகனம் ஓட்டி வந்திருக்க முடியும் என்று கேள்வி எழுப்பினர். மேலும், கார் தீப்பற்றிய உடன் கண்ணடியை உடைத்து அவர் வெளியேறியுள்ளார். மதுபோதையில் இருக்கும் நபரால் இவ்வாறு வெளியேறி இருக்க முடியாது என்று காவல்துறையினர் விளக்கம் கொடுத்தனர்.
விபத்துக்கு காரணமான குழி?
இந்த நிலையில் ரிஷப் பண்டை மருத்துவமனையில் நேரில் சந்தித்துப் பேசிய டெல்லி கிரிக்கெட் அசோசியேஷன் இயக்குனர் ஷியாம் சர்மா, அவர் குறித்து தகவல்களை பகிர்ந்துள்ளார். ரிஷப் பண்ட் குணமாகி வருவதாகவும் பிசிசிஐ அவரை வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை பெற வைக்க ஏற்பாடு செய்து வருவதாகவும், சாலையில் இருந்த பள்ளத்தில் விடாமல் காரை திருப்ப முற்பட்ட போதுதான் விபத்து ஏற்பட்டது என ரிஷப் பண்ட் கூறியதாகவும் ஷியாம் சர்மா தெரிவித்தார்.
முன்னதாக ரிஷப் பண்ட்டிற்கு ஏற்பட்ட காயம் மற்றும் அவரது விபத்து தொடர்பான தகவல்களை பிசிசிஐ அறிக்கையாக வெளியிட்டது. அவருக்குத் தேவையான சிகிக்சை மற்றும் இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து வெளிவரத் தேவையான அனைத்தையுமே பிசிசிஐ கவனித்துக் கொள்ளும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிஷப் இடத்தை நிரப்ப 3 வீரர்கள் போட்டி
ரிஷப் பண்டுக்கு நீண்ட கால சிகிச்சையும் ஓய்வும் தேவைப்படுவதாக அவரது பயிற்சியாளர் தேவேந்திர சர்மா கூறியுள்ளார். காயத்தில் இருந்து அவர் முழுமையாக குணமடைய குறைந்தது 3 முதல் 6 மாதங்கள் வரை ஆகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வரும் பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற இருக்கும் 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரையும் ரிஷப் பண்ட் தவறவிட இருக்கிறார். இதனை அடுத்து ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கு புதிய விக்கெட் கீப்பரை தேர்வு செய்வது குறித்து தேர்வு கமிட்டி ஆலோசித்து வருகிறது. ரிஷப் பண்டின் இடத்தை நிரப்ப 3 வீரர்கள் போட்டியில் இருப்பதாக கூறப்படுகிறது. இஷான் கிஷன், கே.எஸ்.பரத், இந்தியா ஏ அணியை சேர்ந்த உபேந்திர யாதவ் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/NZYOQiIசாலையில் இருந்த பள்ளத்தில் விடாமல் காரை திருப்ப முற்பட்ட போதுதான் விபத்து ஏற்பட்டது என ரிஷப் பண்ட் கூறியதாக டெல்லி கிரிக்கெட் அசோசியேஷன் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்