ஐபிஎல் மினி ஏலத்தில் அடிப்படை விலை ரூ.2 கோடி பிரிவில் ஒரு இந்திய வீரர் கூட இடம்பெறவில்லை.
ஐபிஎல் மினி ஏலம் வரும் டிசம்பர் 23ஆம் தேதி கொச்சியில் நடைபெறுகிறது. இந்த ஏலத்திற்கு 991 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர். எனினும் அதிகபட்சமாக 87 வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். இதில் 30 வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற வாய்ப்பு இருக்கிறது. ஏலத்தில் 714 வீரர்கள் இந்தியாவிலிருந்தும், 277 வீரர்கள் வெளிநாடுகளில் இருந்தும் பங்கேற்கிறார்கள். அதில் 185 வீரர்கள் ஏற்கனவே சர்வதேச அளவில் விளையாடியவர்கள்; 786 வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாதவர்கள்; 20 பேர் உறுப்பு நாடுகளைச் சேர்ந்தவர்கள். இந்த ஏலத்தில் அதிகபட்சமாக 2 கோடி, 1.5 கோடி, 1 கோடி ஆகிய 3 பெரிய பிரிவுகளில் நட்சத்திர வீரர்கள் குறைந்தபட்ச விலையில் போட்டியிடுகிறார்கள்.
நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், இங்கிலாந்து அணியை சேர்ந்த ஆல்ரவுண்டர்கள் பென் ஸ்டோக்ஸ், சாம் கரன், ஆஸ்திரேலிய அணியின் கேமரூன் கிரீன் உள்ளிட்ட வீரர்கள் ரூ.2 கோடி அடிப்படை விலையில் பெயரை பதிவு செய்துள்ளனர். அடிப்படை விலை ரூ.2 கோடி பிரிவில் ஒரு இந்திய வீரர் கூட இடம்பெறவில்லை. இவர்கள் போக கொல்கத்தா அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட அஜிங்கிய ரகானே, மும்பையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஜெயதேவ் உனட்கட் ஆகியோர் தங்களது விலையை 50 லட்சமாக குறைத்துக் கொண்டுள்ளார்கள்.
2 கோடி ரூபாய் பிரிவு: நாதன் கவுல்டர்-நைல், கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், கிறிஸ்லின், டாம் பான்டன், சாம்கரன், கிறிஸ் ஜோர்டான், டைமல் மில்ஸ், ஜேமி ஓவர்டன், கிரேக் ஓவர்டன், அடில் ரஷித், பில் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ஆடம் மில்னே, ஜிம்மி நீஷாம், கேன் வில்லியம்சன், ரிலீ ரோசோவ், ராஸ்ஸி வான் டெர் டுசென், ஏஞ்சலோ மேத்யூஸ், நிக்கோலஸ் பூரன், ஜேசன் ஹோல்டர்.
ஒன்றரை கோடி ரூபாய் பிரிவு: சீன் அபோட், ரிலே மெரிடித், ஜே ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா, ஷாகிப் அல் ஹசன், ஹாரி புரூக், வில் ஜாக்ஸ், டேவிட் மாலன், ஜேசன் ராய், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட். ஒரு கோடி ரூபாய்: மயங்க் அகர்வால், கேதர் ஜாதவ், மணீஷ் பாண்டே, முகமது நபி, முஜீப் உர் ரஹ்மான், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், ஆண்ட்ரூ டை, ஜோ ரூட், லூக் வுட், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், மார்ட்டின் குப்தில், கைல் ஜாமிசன், டாம் ஹென்ரி, டேரில் மிட்செல், ஹென்ரிச் கிளாசென், தப்ரைஸ் ஷம்சி, குசல் பெரேரா, ரோஸ்டன் சேஸ், ரகீம் கார்ன்வால், ஷாய் ஹோப், அக்கேல் ஹொசைன், டேவிட் வைஸ்.
கடந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் அடுத்த வருடம் நடைபெறும் ஐபிஎல் தொடரில் இருந்து பணிச்சுமை காரணமாக விலகி உள்ளர். அதேபோல் ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த பேட்ஸ்மேன் மிட்செல் ஸ்டார்க், இந்த முறை ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்யாததால் விளையாட மாட்டார் எனத் தெரிகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/CBWvqt6ஐபிஎல் மினி ஏலத்தில் அடிப்படை விலை ரூ.2 கோடி பிரிவில் ஒரு இந்திய வீரர் கூட இடம்பெறவில்லை.

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்