உசிலம்பட்டியில் வானத்தில் பறக்கும் ரயில் போன்று தோன்றிய வித்தியாசமான காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நேற்றிரவு சுமார் எட்டு மணி அளவில் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் இருந்த இளைஞர்கள், வானத்தில் தோன்றிய பறக்கும் ரயில் போன்ற வித்தியாசமான உருவத்தை பார்த்துள்ளனர்.

இதை உடனே தங்களது செல்போனில் படம் பிடித்துள்ளனர். ஆனால், சிறிது நேரத்தில் அந்த உருவம் மறைந்து விட்டது. அதை பற்றி விசாரித்த போது ட்விட்டரை வாங்கிய எலன் மாஸ்க்கின் சாட்டிலைட் தொகுப்பாக இருக்கும் எனவும், இது இரண்டு மாதத்திற்கு முன்பு வட இந்தியாவில் தெரிந்ததாகவும் தற்போது உசிலம்பட்டி பகுதியில் தெரிந்திருப்பதாகவும் தெரிவித்தனர்.
மிகவும் ஆச்சரியமாக பறக்கும் ரயில் அல்லது கப்பல் போல் காட்சியளித்தது. இதுபோன்று முதல் முறையாக இந்த பகுதியில் பார்ப்பதாகவும் இளைஞர்கள் தெரிவித்தனர்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/kYFOdWK

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்