'அலிபாய்' வந்துட்டாருல இனிமே எல்லாம் மாறிடும் என நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமே சிஎஸ்கே அணியே கிட்டத்தட்ட இந்த மனநிலையில்தான் இருக்கிறது. ஒரே ஒரு வீரரின் மீது மட்டுமே இவ்வளவு பெரிய நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் உருவானதற்கான காரணம் என்ன?
ஐ.பி.எல் 15 வது சீசன் தொடங்கி அத்தனை அணிகளும் முதல் போட்டியில் ஆடி முடித்துவிட்டன. சென்னை அணியும் முதல் போட்டியில் ஆடிவிட்டது. அதில் தோற்றும் போயிருக்கிறது. சென்னை அணியின் தோல்வியை விட அலிபாய் வருவாரா? மாட்டாரா? என்கிற விவாதமே அதிகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. விசா காரணமாக மொயீன் அலி கொஞ்சம் தாமதமாகத்தான் வருவார். முதல் போட்டியில் ஆடமாட்டார் என்றவுடனேயே சென்னை ரசிகர்கள் துடிதுடித்து போய்விட்டனர். இப்போது லக்னோவுக்கு எதிரான இரண்டாம் போட்டியில் மொயீன் அலி நிச்சயம் ஆடுவார் என்கிற செய்திகள் வெளியாகியிருக்கிறது. இப்போதுதான் ரசிகர்கள் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகியிருக்கின்றனர். 'அலிபாய்' வந்துட்டாருல இனிமே எல்லாம் மாறிடும் என நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமே சிஎஸ்கே அணியே கிட்டத்தட்ட இந்த மனநிலையில்தான் இருக்கிறது. ஒரே ஒரு வீரரின் மீது மட்டுமே இவ்வளவு பெரிய நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் உருவானதற்கான காரணம் என்ன?
2018 ஐ.பி.எல் சீசனில் சென்னை அணி கம்பேக் கொடுத்து சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. 2019 சீசனில் சீராக பெர்ஃபார்ம் செய்து ரன்னர் அப் ஆகியிருந்தது. 2020 சீசனில்தான் எதிர்பாராத அடி. ப்ளே ஆஃப்ஸிற்கு கூட சென்னை அணியால் தகுதிப்பெற முடியவில்லை. 2021 சீசனிலும் அதே சென்னை அணிதான். ஆனால், சிறிய அளவில் சில மாற்றங்கள் இருந்தது. குறிப்பாக, மொயீன் அலி புதிதாக அணிக்குள் வந்திருந்தார். இந்த 2021 சீசனில் சென்னையே சாம்பியன் ஆகிறது. மொயீன் அலி அதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்திருந்தார்.
சென்னை அணியில் பல வீரர்களுமே பல சீசன்களாக வாய்ப்பே கிடைக்காமல் பென்ச்சில் உட்காந்திருப்பதை பார்த்திருப்போம். ஆனால், மொயீன் அலிக்கு மட்டும் முதல் போட்டியிலேயே ப்ளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் இத்தனை சீசன்களாக சென்னை அணியின் ஆஸ்தான நம்பர் 3 வீரராக இருந்த சுரேஷ் ரெய்னாவை கீழிறக்கிவிட்டு அவருடைய இடத்தில் மொயீன் அலியை தோனி இறக்கியிருந்தார். தோனியின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் மொயீன் அலி சிறப்பாக ஆடியிருந்தார். கடந்த சீசனில் சென்னை அணியிம் ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் டூப்ளெஸ்சிஸுக்கு பிறகு அதிக ரன்களை அடித்த வீரராக மொயீன் அலியே இருந்தார்.
மொயீன் அலி அப்படி என்ன தாக்கத்தை சென்னை அணியில் ஏற்படுத்தினார்? என்பதற்கு 2021 சீசனை கணக்கில் கொண்டால் மட்டும் போதாது. அதற்கு முந்தைய சீசன்களையும் கொஞ்சம் இறங்கி அலசி பார்க்க வேண்டும்.
2020 சீசனில் சென்னை அணிக்கு எதுவுமே சரியாக அமைந்திருக்கவில்லை. ஓப்பனிங்கில் வாட்சன் சொதப்பல். டூப்ளெஸ்சிஸ் சீராக இல்லை. ரெய்னா அந்த சீசனிலேயே இல்லை. தோனியால் பழைய மாதிரி ஆட முடியவில்லை. கேதார் ஜாதவ் அளவுக்கு அதிகமாக வாய்ப்பு கிடைத்தும் ரன் அடிக்க முடியாமல் திணறினார். அந்த சீசன் முடிகிற சமயத்தில் பெரும் நம்பிக்கையாக ருத்துராஜ் கெய்க்வாட் எழுச்சியடைந்தார். அதனால் அடுத்த சீசனில் ருத்துராஜ் கெய்க்வாட்டை முழுமையாக ஓப்பனராக்கிவிடலாம் என்ற முடிவுக்கு சிஎஸ்கே வந்தது. 2021 சீசனுக்கு ஓப்பனிங்கிற்கு ருத்துராஜ் கெய்க்வாட் - டூப்ளெஸ்சிஸ் என ஒரு நல்ல கூட்டணி அமைந்துவிட்டது. பின்வரிசையில் ஆடுவதற்கு தோனி, ஜடேஜா, ப்ராவோ ஆகியோர் இருந்தனர். ஜடேஜா உச்சக்கட்ட ஃபார்மில் இருந்ததால் அவர் அந்த ஃபினிஷர் ரோலையும் ஏற்றுக்கொண்டார். எனில், ஓப்பனிங்கிற்கும் ஃபினிஷிங்கிற்கும் இடையேயான மிடில் ஆர்டர்? 2020 சீசனில் ஆடாத சுரேஷ் ரெய்னா 2021 சீசனுக்கு ரிட்டர்ன் ஆகியிருந்தார். ஆனால், இந்த ரெய்னா மீது பெரியளவில் நம்பிக்கை இல்லை. ஏனெனில், 2019 ஐ.பி.எல் க்கும் 2021 ஐ.பி.எல் க்கும் இடையில் ரெய்னா எந்தவிதமான கிரிக்கெட்டும் ஆடியிருக்கவில்லை. மேலும், 2018,19 சீசன்களிலுமே ரெய்னா பழைய ரெய்னாவாக ஆடியிருக்கவில்லை. அதனால், ரெய்னாவின் மீது முன்பு போல் பெரியளவில் பொறுப்பை சுமத்த முடியாது எனும் சூழல். அம்பத்தி ராயுடுவை மட்டுமே நம்பியிருக்கவும் முடியாது. இந்த சூழலில்தான் மினி ஏலத்தில் 7 கோடி கொடுத்து மொயீன் அலியை சென்னை ஏலத்தில் எடுத்தது.
மொயீன் அலி என்ன செய்தார்? என்பதை பார்ப்பதற்கு முன், சில புள்ளிவிவரங்களை பார்த்துவிடுவோம். 2020 சீசனில் சென்னை அணி படுமொக்கையாக ஆடியிருந்ததல்லவா? அந்த சீசனில் 7-15 இந்த மிடில் ஓவர்களில் மிகக்குறைந்த ரன்களை எடுத்திருந்த அணிகளின் பட்டியலில் பெங்களூருவிற்கு அடுத்த இடத்தில் சென்னை அணி இருந்தது. மிடிலில் 7-15 இந்த 9 ஓவர்களில் அந்த 2021 சீசன் முழுவதும் சென்னை அணி 932 ரன்களை எடுத்திருந்தது. எனில், சராசரியாக இந்த 9 ஓவர்களில் 66.5 ரன்களை சென்னை அணி எடுத்திருக்கிறது. 7-15 இந்த ஓவர்களில் சென்னையின் ரன்ரேட் 7.3 ஆக மட்டுமே இருந்தது. இந்த கட்டத்தில் பெங்களூருவுக்கு அடுத்தப்படியாக குறைவான ரன்ரேட்டை கொண்டிருந்த அணியாக சென்னை இருந்தது. 2020 சீசன் மட்டுமில்லை. சென்னை அணி கம்பேக் கொடுத்திருந்த 2018 சீசனிலிருந்து கணக்கிட்டாலுமே சென்னை இந்த 7-15 ஓவர்களில் சுமாராகவே பெர்ஃபார்ம் செய்திருக்கிறது. அந்த ஆண்டுகளிலும் பெங்களூருவிற்கு அடுத்தப்படியாக மிடில் ஓவர்களில் குறைவான ரன்களை எடுத்த அணியாக சென்னையே இருந்தது. மிடில் ஓவர்களில் சென்னயின் ரன்ரேட் இந்த மூன்று சீசன்களில் சராசரியாக 7.5 ஆக இருந்திருக்கிறது. சிஎஸ்கேவின் இந்த மிடில் ஓவர் பின்னடைவையும் ரெய்னாவின் மந்தமான ஆட்டத்தையும் சேர்த்தே கூட பார்க்கலாம். ஓரளவுக்கு நின்று ஆடுவதற்கு கூட 2020 சீசனில் ரெய்னா இல்லாமல் போனது இன்னும் பெரிய பின்னடைவுகளை ஏற்படுத்தியது. சென்னையின் நிலை ரொம்பவே மோசமானது.
இந்த சமயத்தில்தான் 2021 சீசனில் சென்னைக்கு மொயீன் அலி எண்ட்ரி கொடுக்கிறார். ஓப்பனர்களான ருத்துராஜும் டூப்ளெஸ்சிஸும் நல்ல ரன்ரேட்டில் ஏற்படுத்திக் கொடுக்கும் தொடக்கத்தை சரியவிடாமல் அப்படியே அடுத்த பேட்ஸ்மேன்களுக்கு கைமாற்றி விடுவதுதான் மொயீன் அலிக்கு ரோலாக கொடுக்கப்பட்டது. மந்தமாக ஆடிக்கொண்டிருந்த ரெய்னாவின் நம்பர் 3 இல் இறங்கி அதிரடியாக ஆட வேண்டும் அதுதான் மொயீன் அலிக்கு கொடுக்கப்பட்ட வேலை. அதை மொயீன் அலி சிறப்பாகவே செய்திருந்தார். ருத்துராஜூக்கும் டூப்ளெஸ்சிஸுக்கும் அடுத்தப்படியாக அதிகமாக 357 ரன்களை எடுத்திருந்தார். 7-15 மிடில் ஓவர்களில் முந்தைய சீசனில் 7 ஐ சுற்றியிருந்த சென்னையின் ரன்ரேட் 2021 சீசனில் 8 க்கும் மேல் சென்றிருந்தது. இந்த 9 ஓவர்களில் சராசரியாக 66.5 ரன்கள் என்கிற நிலையிலிருந்து 72.8 ரன்கள் என்ற நிலைக்கு உயர்ந்தது. சொற்பமான ரன்கள் போல தோன்றினாலும் ரன்ரேட்டில் கூடியிருக்கும் அந்த 1 ரன்னும் ரொம்பவே முக்கியம்தான். மிகக்குறைவாக ஸ்கோர் செய்திருக்கும் அணிகளுக்கும் அதிகமாக ஸ்கோர் செய்திருக்கும் அணிகளுக்கும் இடையேயான வித்தியாசம் பல நேரங்களில் இவ்வளவாகத்தான் இருக்கும்.
மேலும், கடந்த ஐ.பி.எல் சீசன் முழுமையாக நடக்கவில்லை. கொரோனா காரணமாக இரண்டு பாதிகளாக நடந்திருந்தது. இதில், முதல் பாதி இந்தியாவில் வைத்து நடந்திருந்தது. அந்த முதல் பாதி ஆட்டங்களில் மொயீன் அலியின் தாக்கம் இன்னும் வீரியமாகவே தெரியும். இந்தியாவில் வைத்து நடந்த அந்த முதல் பாதியில் சென்னை அணி 7 போட்டிகளில் ஆடியிருந்தது. இந்த 7 போட்டிகளில் மிடில் ஓவர்களில் 595 ரன்களை அதாவது சராசரியாக போட்டிக்கு 85 ரன்களை எடுத்திருந்தது. 2020 சீசனில் எடுத்திருந்த 66.5 ரன்களை இதோடு ஒப்பிட்டு பாருங்கள். ஏறக்குறைய 20 ரன்களை மிடில் ஓவர்களில் சென்னை அதிகமாக எடுத்திருக்கிறது. ரன்ரேட்டும் 2020 சீசனின் 7.3 என்பதிலிருந்து 9.45 ஆக உயர்ந்திருக்கிறது. இதற்கு காரணம் மொயீன் அலியின் அதிரடியே. ருத்துராஜ் மற்றும் டூப்ளெஸ்சிஸ் கொடுத்த நல்ல தொடக்கத்தை தொய்வடையவிடாமல் அடுத்த வீரர்களிடம் கொண்டு சேர்த்தார். இந்த 7 போட்டிகளில் மட்டும் ஒரு அரைசதத்துடன் 206 ரன்களை எடுத்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 157. இந்த 7 போட்டிகளில் சென்னை 5 போட்டிகளில் வென்றிருந்தது. ரெய்னா நம்பர் 3 இல் ஆடியிருந்தால் நிச்சயமாக அவர் இருந்த மந்தமான ஃபார்மிற்கு இந்த ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடியிருக்க முடியாது. ருத்துராஜும் டூப்ளெஸ்சிஸும் கொடுக்கும் நல்ல தொடக்கம் தொய்வடைந்திருக்கும். அணியின் பெர்ஃபார்மென்ஸும் பாதிக்கப்பட்டிருக்கும்.
இதுதான் மொயீன் அலி பேட்டிங்கில் ஏற்படுத்திய தாக்கம். பௌலிங்கிலும் நல்ல ஒத்துழைப்பை கொடுத்திருந்தார். 2019 சீசனில் ஆரஞ்சு கேப்பை வென்றிருந்தவர் சென்னையின் இம்ரான் தாஹீர். ஆனால், அவரை 2020 சீசனில் சென்னை அணியால் பயன்படுத்தவே முடியவில்லை. பென்ச்சிலேயே உட்காந்திருந்தார். ஒன்றிரண்டு போட்டிகளில் மட்டுமே ஆடியிருந்தார். வேண்டுமென்று ஒதுக்கவில்லை. சென்னையின் சூழல் அப்படி அமைந்துவிட்டது. பேட்டிங்கில் படுமொக்கையாக ஆடியதால் சாம் கரனை தொடர்ந்து ப்ளேயிங் லெவனில் வைத்திருக்க வேண்டிய தேவை எழுந்தது. 4 வெளிநாட்டு வீரர்கள்தான் ஆட முடியும் என்பதால் இந்த காம்பீனேஷனில் வெற்றிகரமானவராக இருந்தும் ஸ்பின்னரான இம்ரான் தாஹீரை உள்ளேயே கொண்டு வர முடியவில்லை. இதனால் ஜடேஜாவோடு பியுஸ் சாவ்லா, கரன் சர்மா போன்ற ஸ்பின்னர்கள் ஆடியிருந்தனர். ஸ்பின் எடுபடவே இல்லை. இந்த பிரச்சனையையும் மொயீன் அலி போக்கினார். ஸ்பின்னர் + பேட்ஸ்மேனாக இருந்ததால் தோனி இவரை துணிந்து ப்ளேயிங் லெவனில் எடுத்தார். சாம் கரன் ஜடேஜா போன்றோரை மாறி மாறி ஆடவைத்தார். பேட்டிங்கில் கலக்கியதை போலவே ஸ்பின்னிலும் ஜடேஜாவுக்கு துணைபுரிந்தார். எடுத்தது 6 விக்கெட்தான். ஆனால், எக்கானமி அதுவும் 6 ஐ சுற்றிதான் இருக்கிறது. டி20 போட்டிகளில் இது மிகச்சிறந்த எக்கானமி ரேட்.
இந்த சீசனில் முதல் போட்டியில் மொயீன் அலி ஆடவில்லை என்றவுடன் அவருக்கு பதில் பேட்டிங்கிற்கு சிவம் துபே ஸ்பின்னுக்கு சாண்ட்னர் என இரண்டு வீரர்களை ப்ளேயிங் லெவனில் எடுக்க வேண்டிய நெருக்கடி சென்னைக்கு ஏற்பட்டது. இதுதான் மொயீன் அலி ஏற்படுத்திய தாக்கம்.
'அலிபாய்' வந்தால் எல்லாமே மாறிவிடும் என்பது நிஜம்தான்!!
- உ.ஸ்ரீராம்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்