ஜமேஷா முபீனுடன் சனிக்கிழமை இரவு இருந்த 4 பேர் குறித்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை உக்கடம் பகுதியில் காரில் சிலிண்டர் வெடித்து சிதறிய நிகழ்வு தொடர்பாக காவல்துறையினர் பல்வேறு சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டனர். உயிரிழந்த ஜமேஷா முபின் வீட்டின் அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அதில் சனிக்கிழமை இரவு 11.25 மணிக்கு ஜமேஷா முபின் வீட்டில் இருந்து அவர் உட்பட 5 பேர் மர்ம பொருளை தூக்கி செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. அந்த சிசிடிவி காட்சிகளில் உள்ள மற்ற நபர்கள் 4 பேர் யார் என்பது குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் ஜமேஷா முபீன் உயிரிழந்தார். ஜமேஷா முபின் வீட்டில் இருந்து பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம் பவுடர், சார்க்கோல், சல்பர் போன்ற நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டது. ஜமேஷா முபீன் வீடு இருக்கும் பகுதிகளில் இருக்கும் சிசிடிவி கேமராக்கள் ஆய்வுக்கு உட்படுத்தபட்டது. அதில் சனிக்கிழமை நள்ளிரவு ஜமேஷா முபீனுடன் 4 பேர் இருப்பது தெரியவந்த நிலையில், அந்த நபர்கள் குறித்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்கலாமே: திண்டுக்கல்: பட்டாசு வெடித்ததை கண்டித்த பெற்றோர் - விரக்தியில் விபரீத முடிவெடுத்த சிறுமி
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்