படுகொலை செய்யப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமர் சின்சோ அபேவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை ஜப்பான் பயணம் ஆகிறார்.
தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கடந்த ஜூலை எட்டாம் தேதி ஜப்பான் முன்னாள் பிரதமர் சின்சோ அபே நபர் ஒருவரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.
ஜப்பானின் நீண்ட நாட்கள் பிரதமராக பணியாற்றியவர் என்ற பெருமை கொண்டவர் என்பதால் அவரது இறுதிச் சடங்கை மிக பிரம்மாண்டமான முறையில் நடத்த ஜப்பான அரசு திட்டமிட்டது. அதன்படி நாளை இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. இந்த இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை ஜப்பான் பயணம் செய்கிறார்.
ஜப்பானின் தற்போதைய பிரதமரான பிமியோ கிஷிடாவை பிரதமர் மோடி தனியாக சந்திப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஒரு நாளுக்கும் குறைவாகவே ஜப்பானில் பிரதமர் மோடி செலவிட இருக்கிறார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/VPGZrepபடுகொலை செய்யப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமர் சின்சோ அபேவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை ஜப்பான் பயணம் ஆகிறார்.
தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கடந்த ஜூலை எட்டாம் தேதி ஜப்பான் முன்னாள் பிரதமர் சின்சோ அபே நபர் ஒருவரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.
ஜப்பானின் நீண்ட நாட்கள் பிரதமராக பணியாற்றியவர் என்ற பெருமை கொண்டவர் என்பதால் அவரது இறுதிச் சடங்கை மிக பிரம்மாண்டமான முறையில் நடத்த ஜப்பான அரசு திட்டமிட்டது. அதன்படி நாளை இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. இந்த இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை ஜப்பான் பயணம் செய்கிறார்.
ஜப்பானின் தற்போதைய பிரதமரான பிமியோ கிஷிடாவை பிரதமர் மோடி தனியாக சந்திப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஒரு நாளுக்கும் குறைவாகவே ஜப்பானில் பிரதமர் மோடி செலவிட இருக்கிறார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்