கோவைக்கு தங்கம் கடத்திய மலேசியா தம்பதியின் பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்கக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன், அவர்களுக்கு எதிரான வழக்கை 6 மாதங்களில் முடிக்க கோவை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் மலேசியாவிலிருந்து கோவை வந்த விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக வருவாய் நுண்ணறிவு இயக்குனரகத்திற்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையில் மலேசியாவை சேர்ந்த அங்கேஸ்வரன் மற்றும் அவரது மனைவி நந்தினியிடமிருந்து 4.58 கோடி ரூபாய் மதிப்பிலான 4.2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவருக்கும் ஜாமின் வழங்கப்பட்ட நிலையில், முடக்கப்பட்ட பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்கக் கோரி இருவரும் தாக்கல் செய்த மனுவை கோவை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இருவரும் குற்றவியல் மறு ஆய்வு மனுக்களை தாக்கல் செய்தனர். அதில் தங்களுக்கு ஜாமின் வழங்கப்பட்ட போது நிபந்தனைகள் எதுவும் விதிக்கப்படாத நிலையில், பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட வேண்டுமென கோரியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்த போது ஆஜரான வருவாய் நுண்ணறிவு இயக்குனர் தரப்பு வழக்கறிஞர், பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைத்தால் அவர்கள் மலேசியாவிற்கு தப்பிச்செல்ல வாய்ப்புள்ளதால் பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்க கூடாது என வாதிட்டார். இதனையடுத்து, பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்க கோரிய இருவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்த நீதிபதி, அவர்கள் மீதான வழக்கின் விசாரணையை ஆறு மாதங்களில் முடிக்க கோவை தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: உ.பி: பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட பட்டியலின சிறுமிகள்; 6 பேர் கைது
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்