Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ஆசிய கோப்பை: ஆப்கானிஸ்தான் அணியின் சவாலை சமாளிக்குமா வங்கதேசம்?

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இரவு நடைபெறும் 3வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்-வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்றுள்ளன.   இந்நிலையில் இந்த போட்டி தொடரில் சார்ஜாவில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் 3வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.  

image

முகமது நபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் முன்னாள் சாம்பியனான இலங்கைக்கு அதிர்ச்சி அளித்து அபார வெற்றி பெற்றது. அதே உற்சாகத்துடன் ஆப்கானிஸ்தான் இன்று வங்கதேசம் அணியை எதிர்கொள்கிறது. 2வது வெற்றியுடன் ‘சூப்பர் 4’ சுற்று வாய்ப்பை உறுதி செய்யும் முனைப்புடன் அந்த அணி களமிறங்குகிறது. வங்கதேச அணியை பொறுத்தமட்டில் சமீபகாலங்களில் தடுமாற்றத்தை சந்தித்து வந்தாலும் ஆசிய கோப்பை தொடரில் எழுச்சி பெற காத்திருக்கிறது.

இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் நாளை (புதன்கிழமை) ஹாங்காங் அணியை எதிர்கொள்ளவிருக்கிறது.

இதையும் படிக்க: 'பாசத்துல நம்மள மிஞ்சிருவாங்க போலையே' -இந்திய அணியின் வெற்றியை கொண்டாடிய ஆப்கன் ரசிகர்கள்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/jngGm5a

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்