குழந்தைகள் முன்னிலையில் பெற்றோர்கள் சண்டையிட்டுக் கொள்வதே தவறான செயலாக பார்க்கும் வேளையில், குடித்துவிட்டு கட்டிய மனைவியை அடித்து தாக்குதலுக்கு ஆளாக்கும் கொடூரங்கள் இந்திய சமூகத்தில் தொடர்ந்து நடந்தேறி வருகிறது.
இது அந்த குடும்பத்தில் இருக்கும் குழந்தைகளின் மனநிலையை எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அறியாமலேயே பலரும் தொடர்ச்சியாக செய்து வருகின்றனர்.
அந்த வகையில் தெலங்கானாவின் முஸ்தாபாத் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்ற நபர் தன்னுடைய மனைவி தீபிகாவை தினந்தோறும் அடித்து தாக்கியது குறித்து அவர்களின் 7 வயது மகன் போலீசில் புகார் அளித்திருப்பது தெரிய வந்திருக்கிறது.
சுங்கபதி பரத் என்ற அந்த 7 வயது சிறுவன் முஸ்தாபாத் பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தையான பாலகிருஷ்ணன் தினந்தோறும் குடித்துவிட்டு வந்து தன்னுடைய அம்மா தீபிகாவை அடிப்பதை வழக்கமாக கொண்டிருப்பதை கண்டு மிகவும் வருந்தியிருக்கிறார்.
ஆகவே தந்தையின் தாக்குதலில் இருந்து அம்மாவை காப்பாற்ற வேண்டும் என எண்ணி எவரது துணையும் இல்லாமல் தானாக முஸ்தாபாத் பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்றிருக்கிறார். அங்கு சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேஸ்வர்லுவை சந்தித்து தனது தாய்க்கு நேரும் கொடூரத்தை எடுத்துரைத்திருக்கிறார் அந்த சிறுவன்.
அதன்படி, “என்னுடைய அம்மா தினந்தோறும் என் அப்பாவால் கஷ்டப்படுகிறார். அவரை காப்பாற்ற உங்களால்தான் முடியும்.” என போலீசாரிடம் அந்த சிறுவன் கூறியதை கேட்டு அதிர்ச்சிக்கும் ஆச்சர்யத்திற்கும் ஆளாகியிருக்கிறார்கள். ஏனெனில் இந்த சிறு வயதில் இத்தனை பக்குவமாக வந்து புகார் கொடுத்தது போலீசாரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
சிறுவன் பரத்தின் புகாரை அடுத்து அவரது பெற்றோர் பாலகிருஷ்ணனுக்கும் தீபிகாவிற்கும் உரிய ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார்கள். மேலும் குழந்தைகள் முன்பு சண்டையிடுவதையும் நிறுத்த வேண்டும் , இல்லையே தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருக்கிறார்கள். இதனிடையே போலீசிடம் சிறுவன் பரத் புகாரளிப்பதை காவல்துறையினர் வீடியோவாகவும், புகைப்படமாகவும் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார்கள்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்