Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

நடிகர் விஜய் சொகுசு கார் வரி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கும் சென்னை உயர்நீதிமன்றம்!

நடிகர் விஜய் வெளிநாட்டில் இருந்து கார் இறக்குமதி செய்யப்பட்டதற்கான வரி விதிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

கடந்த 2005 ஆம் ஆண்டு நடிகர் விஜய் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்த 63 லட்சம் ரூபாய் மதிப்பிலான பி.எம்.டபிள்யூ. எக்ஸ்5 காருக்கு, நுழைவு வரி செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டு இருந்தது. இதை எதிர்த்து விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் `நுழைவு வரி வசூலிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது’ என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்பின், விஜய் தரப்பில் ரூ.7,98,075 ரூபாய் நுழைவு வரி செலுத்தப்பட்டது. இந்நிலையில், வரி செலுத்தப்படாத இடைப்பட்ட காலத்திற்கான அபராதமாக ரூ.30,23,609 ரூபாய் செலுத்த வேண்டுமென கடந்த 2021 டிசம்பர் 17ல் வணிக வரித்துறை விஜய்க்கு மீண்டும் உத்தரவிட்டது.

image

இந்த உத்தரவை எதிர்த்து விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், `கார் இறக்குமதி செய்யப்பட்டதில் இருந்து மாதத்திற்கு 2சதவீதம் என கணக்கிட்டு மட்டுமே அபராதம் விதிக்கப்பட வேண்டும். ஆனால் தமக்கு 400 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது’ என விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நடிகர் விஜய் தரப்பின் அந்த மனுவிற்கு பதிலளித்த வணிக வரித்துறை, `இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்’ என தெரிவித்தது. மேலும், `நுழைவு வரியை செலுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் 2019ல் உத்தரவு பிறப்பித்த பிறகு, குறித்த காலத்தில் நுழைவு வரி செலுத்தாததால், 2005 டிசம்பர் முதல், 2021 செப்டம்பர் வரையிலான 189 மாதங்களுக்கு நுழைவு வரியில் 2 சதவீதம் அபராத வட்டியாக ரூ.30,23,609 ரூபாய் செலுத்தும்படி உத்தரவிட்டோம். சட்டத்தில் அதற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டது. இந்த இரு மனுக்களையும் கணக்கில் கொண்டு, இவ்வழக்கில் நீதிபதி சுரேஷ்குமார் இன்று தீர்ப்பு வழங்குகிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/60xpkXG

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்