`கே.பி.முனுசாமி குவாரிக்கு ஏற்கெனவே சீல் வைத்துவிட்டோம்’ என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
கோவை தனியார் நட்சத்திர ஹோட்டலில் நீர்வளத்துறை சார்பில் கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கத்தினருடன் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்ற அந்த ஆலோசனை கூட்டத்தில், அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் சாமிநாதன் ஆகியோர் பங்கேற்றனர். கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் உள்ள பலர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தை தொடரந்து அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பொன்னையன் பேசிய ஆடியோ விவகாரம் தொடர்பாக கேட்டபோது `பொன்னையன் முன்பைப் போல இல்ல; இப்போதெல்லாம் எதையாவது உளறிக் கொண்டிருக்கிறார்” என பதிலளித்தார். பின் அந்த ஆடியோவில் குறிப்பிடப்பட்டிருந்த கேபி முனுசாமி குவாரிக்கு அனுமதி வழங்கப்பட்டது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, "அவருடைய குவாரிக்கு ஏற்கனவே சீல் வைத்துள்ளோம். சமீபத்தில் நடைபெற்ற டெண்டர் ஒன்றில் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்து ஒரு குவாரியை பெற்றுள்ளார். கே.பி.முனுசாமிக்கு திமுக உதவவில்லை" என விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை குறித்து கேட்கப்பட்டபோது, “அவர் தடுப்பூசிகளை போட்டுள்ளார்; விரைவில் நலமடைந்து வருவார்” என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/hsEFNOn`கே.பி.முனுசாமி குவாரிக்கு ஏற்கெனவே சீல் வைத்துவிட்டோம்’ என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
கோவை தனியார் நட்சத்திர ஹோட்டலில் நீர்வளத்துறை சார்பில் கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கத்தினருடன் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்ற அந்த ஆலோசனை கூட்டத்தில், அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் சாமிநாதன் ஆகியோர் பங்கேற்றனர். கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் உள்ள பலர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தை தொடரந்து அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பொன்னையன் பேசிய ஆடியோ விவகாரம் தொடர்பாக கேட்டபோது `பொன்னையன் முன்பைப் போல இல்ல; இப்போதெல்லாம் எதையாவது உளறிக் கொண்டிருக்கிறார்” என பதிலளித்தார். பின் அந்த ஆடியோவில் குறிப்பிடப்பட்டிருந்த கேபி முனுசாமி குவாரிக்கு அனுமதி வழங்கப்பட்டது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, "அவருடைய குவாரிக்கு ஏற்கனவே சீல் வைத்துள்ளோம். சமீபத்தில் நடைபெற்ற டெண்டர் ஒன்றில் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்து ஒரு குவாரியை பெற்றுள்ளார். கே.பி.முனுசாமிக்கு திமுக உதவவில்லை" என விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை குறித்து கேட்கப்பட்டபோது, “அவர் தடுப்பூசிகளை போட்டுள்ளார்; விரைவில் நலமடைந்து வருவார்” என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்