திருச்சியில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித்குமார் அணி 4 தங்கம், 2 வெண்கலம் உட்பட 6 பதக்கங்களை வென்றுள்ளனர்.
திருச்சியில் 47-வது மாநில அளவிலான துப்பாக்கி சூடும் போட்டி திருச்சி மாநகர கே.க.நகர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள ரைபிள் கிளப்பில் கடந்த 24.07.2022 முதல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கடந்த 27ஆம் தேதி நடிகர் அஜித்குமார் மாஸ்டர் பிரிவில் பங்கேற்றார். 10 மீட்டர், 25 மீட்டர், 50 மீட்டர் என மூன்று சுடுதளத்திலும், பிஸ்டல் பிரிவு போட்டிகளில் கலந்துகொண்ட அவர் இலக்கை நோக்கி சுட்டார். இதில், பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற அஜித்குமார் அன்றைய தினம் இரவே திருச்சியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார்.
இதில் நடிகர் அஜித்குமார் அணி சென்டர் பயர் பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப் பதக்கமும், ஸ்டாண்டர்டு பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப் பதக்கமும், 50 மீட்டர் பிரீ பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப் பதக்கமும், ஸ்டாண்டர்ட் பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப் பதக்கமும், 50 மீட்டர் பிஸ்டல் ஆண்கள் அணி பிரிவில் வெண்கல பதக்கமும், ஸ்டாண்டர்ட் பிஸ்டல் ஆண்கள் அணி பிரிவில் வெண்கல பதக்கம் என 4 தங்கம், 2 வெண்கல பதக்கம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றனர்.
இவரது அணியில் மூன்று பேர் கலந்துக் கொண்டு துப்பாக்கி சுடும் போட்டியில் புள்ளிகள் அடிப்படையில் அஜித் அணி பதக்கங்களை வென்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இதற்கான பரிசளிப்பு விழா நாளை (31.07.2022) நடைபெற உள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/VjZDtKYதிருச்சியில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித்குமார் அணி 4 தங்கம், 2 வெண்கலம் உட்பட 6 பதக்கங்களை வென்றுள்ளனர்.
திருச்சியில் 47-வது மாநில அளவிலான துப்பாக்கி சூடும் போட்டி திருச்சி மாநகர கே.க.நகர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள ரைபிள் கிளப்பில் கடந்த 24.07.2022 முதல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கடந்த 27ஆம் தேதி நடிகர் அஜித்குமார் மாஸ்டர் பிரிவில் பங்கேற்றார். 10 மீட்டர், 25 மீட்டர், 50 மீட்டர் என மூன்று சுடுதளத்திலும், பிஸ்டல் பிரிவு போட்டிகளில் கலந்துகொண்ட அவர் இலக்கை நோக்கி சுட்டார். இதில், பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற அஜித்குமார் அன்றைய தினம் இரவே திருச்சியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார்.
இதில் நடிகர் அஜித்குமார் அணி சென்டர் பயர் பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப் பதக்கமும், ஸ்டாண்டர்டு பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப் பதக்கமும், 50 மீட்டர் பிரீ பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப் பதக்கமும், ஸ்டாண்டர்ட் பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப் பதக்கமும், 50 மீட்டர் பிஸ்டல் ஆண்கள் அணி பிரிவில் வெண்கல பதக்கமும், ஸ்டாண்டர்ட் பிஸ்டல் ஆண்கள் அணி பிரிவில் வெண்கல பதக்கம் என 4 தங்கம், 2 வெண்கல பதக்கம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றனர்.
இவரது அணியில் மூன்று பேர் கலந்துக் கொண்டு துப்பாக்கி சுடும் போட்டியில் புள்ளிகள் அடிப்படையில் அஜித் அணி பதக்கங்களை வென்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இதற்கான பரிசளிப்பு விழா நாளை (31.07.2022) நடைபெற உள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்