இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவானான சச்சின் தெண்டுல்கரை, வெறுமனே சச்சின் என்று அழைப்பதா, "சச்சின் சார்" என்றல்லவா குறிப்பிட்டிருக்க வேண்டும் எனப் பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
இங்கிலாந்தில் தற்போது நடைபெற்று வரும் 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் வரலாற்றிலேயே முதல்முறையாக மகளிர் கிரிக்கெட் போட்டிகள் இந்த வருடம் சேர்க்கப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த 1998இல் மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் ஆடவர் கிரிக்கெட் விளையாடப்பட்டது. இதையடுத்து சுமார் 24 ஆண்டுகளுக்குப் பிறகு கிரிக்கெட் போட்டியை காமன்வெல்த்தில் ஒரு அங்கமாக சேர்க்கப்பட்டுள்ளதால் பலரும் வரவேற்றுள்ளனர்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில் கருத்து தெரிவித்த முன்னாள் வீரர் சச்சின் தெண்டுல்கர், ''காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட்டைப் பார்ப்பதில் ஆச்சரியமாக இருக்கிறது. இது எங்களின் அழகான விளையாட்டை புதிய பார்வையாளர்களுக்கு எடுத்துச் செல்லும் என்று நம்புகிறேன். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்'' என்று ட்வீட் செய்திருந்தார்.
இந்நிலையில் சச்சின் தெண்டுல்கரின் ட்வீட்டுக்கு பதிலளித்த ஆஸ்திரேலிய அணியின் இளம் வீரர் மார்னஸ் லாபுஷாக்னே, ''நீங்கள் சொல்வதை ஏற்கிறேன் சச்சின். ஆஸ்திரேலிய அணியும் இந்தியாவும் மோதும் தொடக்கப் போட்டி அற்புதமாக இருக்கும்" என்று பதிலளித்தார். இவ்விவகாரம்தான் தற்போது இந்திய ரசிகர்களிடையே கடும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவானான சச்சின் தெண்டுல்கரை, வெறுமனே சச்சின் என்று அழைப்பதா, "சச்சின் சார்" என்றல்லவா குறிப்பிட்டிருக்க வேண்டும் எனப் பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
இதுகுறித்து நெட்டிசன் ஒருவர் பதிவிடுகையில், உங்கள் தந்தை வயதுடைய சச்சின், 'கிரிக்கெட்டின் கடவுள்' என்று கொண்டாடப்படுகிறார். எனவே நீங்கள் அவரை 'சார்' என்று அழைக்க வேண்டும்'' என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொரு நெட்டிசன் ஒருவர், ''சச்சினா? இந்திய வீரர்கள் யாரும் அவரிடம் இப்படி பேசுவதில்லை. கொஞ்சம் மரியாதையாக நடந்து கொள்ளுங்கள். அவர் ஒரு மதிக்கத்தக்க இந்தியர், உங்களை விட சீனியர்'' எனப் பதிவிட்டுள்ளார்.
இதைப்போன்று பலரும் மார்னஸ் லாபுஷாக்னே சச்சின் தெண்டுல்கரை சார் என்று குறிப்பிடாததற்காக அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: செஸ் ஒலிம்பியாட்: முதல் சுற்றில் இந்திய அணிகள் அசத்தல் - தமிழக வீரர் சசிகிரண் பேட்டி
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்