Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

'பிரதமர் முன் பொய் தரவுகளை பேசி தமிழகத்திற்கு அவமதிப்பு பெற்றுதந்தவர் முதல்வர்'- அண்ணாமலை

''பிரதமர் முன்பு பொய்யான தரவுகளை பேசி தமிழகத்திற்கு அவமதிப்பை பெற்றுதந்தவர் தமிழக முதல்வர்'' எனக் குற்றஞ்சாட்டி உள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசின் 8 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம், பழனி அருகே வயலூரில் நடைபெற்றது‌. பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில், ''திமுக கூட்டத்திற்கு பிரியாணி கொடுத்து அழைக்கும் அமைச்சர் சக்கரபாணி,  பாஜக சார்பில் நடைபெறும் கூட்டத்திற்கு யாரும் வரக்கூடாது என்பதற்காக பிரியாணி பொட்டலம் வழங்கியுள்ளார். இதுதான் அரசியல் களம் மாறியுள்ளதற்கான சாட்சி.

image

தமிழகத்தில் என்ன நடந்தாலும் அதற்கு ஸ்டிக்கர் ஒட்டுவதுதான் திராவிட மாடல் ஆட்சி. `தேர்தல் வாக்குறுதி குறித்து முதல்வரிடம் கேட்கக்கூடாது’ என்றும், அதை எழுதியுள்ள டி.ஆர்.பாலுவிடம் கேட்கவேண்டும் என்றும் ஆர்.எஸ்.பாரதி கூறுகிறார். அப்படி என்றால் டி.ஆர்.பாலுவை முதல்வர் ஆக்குங்கள். ஒரு வருட காலத்தில் அதிக பொய் பேசி சாதனை படைத்தவர் முதல்வர் ஸ்டாலின். அதுதான் ஒருவருட சாதனை.

image

முதல்வர் பதவியில் இருக்கக்கூடாது என்ற எண்ணத்தில் அமைச்சர்கள்  வேண்டுமென்றே  பேசிவருகிறார்கள். பிரதமர் முன்பு பொய்யான தரவுகளை பேசி தமிழகத்திற்கு அவமதிப்பை பெற்றுதந்தவர் தமிழக முதல்வர். ஆட்சிக்கு வரும் முன்பு மத்திய அரசு என்றவர், ஆட்சி அமைத்தவுடன் ஒன்றிய அரசு எனக்கூறியதை மக்கள் ஏற்கவில்லை'' என்று கூறினார்.

இதையும் படிக்கலாம்: ``கர்நாடகாவில் குட்கா விற்க தடை இல்லை என்பதால் தமிழகத்தில் கடத்தல் நடக்கிறது”-அமைச்சர்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/vn6haLu

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்