Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

முன்னாள் மனைவி மீது தொடர்ந்த அவதூறு வழக்கில் நடிகர் ஜானி டெப்புக்கு ஆதரவாக தீர்ப்பு

https://ift.tt/ayvJdlk

முன்னாள் மனைவிக்கு எதிரான அவதூறு வழக்கில் ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்புக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன் சீரிஸில், 'ஜாக் ஸ்பாரோ' என்ற கதாபாத்திரம் மூலம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களைக் கவர்ந்தவர் ஜானி டெப். 50 வயதைக் கடந்திருந்த இவர், தன்னைவிட 25 வயது குறைவாக இருந்த அமெரிக்க நடிக்கை ஆம்பர் ஹேர்ட்டை காதலித்து கடந்து 2015ஆம் ஆண்டு கரம் பிடித்தார். ஒன்றரை ஆண்டுகளில் இருவரும் விவாகரத்து பெற்றநிலையில் 2018ஆம் ஆண்டில் ஆம்பர் ஹேர்ட், பெண்கள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான கட்டுரையொன்று எழுதினார்.

ஜானியின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் அவர் கூறிய விஷயங்களால் திரையுலகில் ஜானி டெப்பின் செல்வாக்கு சரியத் தொடங்கியது. இதையடுத்து தனது முன்னாள் மனைவிக்கு எதிராக ஜானி டெப் அவதூறு வழக்கு தொடர்ந்தார். 3 ஆண்டுகள் விசாரணை நடந்த நிலையில், ஜானி டெப்புக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

image

இந்திய ரூபாய் மதிப்பில், 116 கோடி இழப்பீடு செலுத்த ஆம்பர் ஹேர்ட்டுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தனது வாழ்வில் புதிய அத்தியாயம் தொடங்கியிருப்பதாக தீர்ப்பு குறித்து  ஜானி டெப் கருத்து தெரிவித்துள்ளார். உண்மை ஒருபோதும் வீழ்வதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்கலாம்: `ரூ.1 கோடி வைப்பு தொகையை செலுத்திவிட்டு செல்லலாம்’-நடிகை ஜாக்குலினுக்கு நீதிமன்றம் உத்தரவு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்