தமிழகம் போன்ற ஒரு முற்போக்கான மாநிலத்தில் கூட வளர்ச்சி வேறுபாடுகள், துணை பிராந்திய ஏற்றத்தாழ்வுகள் இருந்ததாகவும், ஆனால், பிரதமரின் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, அடிப்படையில் மாற்றத்தை கொண்டு வந்திருப்பதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடியின் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, அடிப்படையில் எந்தவிதமான மாற்றத்தை கொண்டு வந்து, நாட்டை எப்படி வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்கிறது என்பதற்கான முன்னுதாரணத்தை விளக்கினார். இதற்கு முன்பு இருந்த வளர்ச்சி மாடல், பிராந்திய மற்றும் துணை பிராந்திய ஏற்றத்தாழ்வுகளையும், சமூக பதற்றங்களையும் தான் மிகப் பெரிய அளவில் உருவாக்கியிருந்ததாக தெரிவித்தார்.
தமிழகம் போன்ற ஒரு முற்போக்கான மாநிலத்தில் கூட வளர்ச்சி வேறுபாடுகள் மற்றும் துணை பிராந்திய ஏற்றத்தாழ்வுகள் இருந்ததாகவும் சுட்டிக்காட்டினார். இதற்கு முன்பு இருந்த மாடல் டார்வினியன் வளர்ச்சி என்றும், ஒப்பீட்டளவில் புத்திசாலிகளாக இருந்தவர்கள் நன்மைகளை ஒதுக்கிவிட்டு, பெருவாரியான மக்களை பின்தங்க வைத்துவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
இதனால் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக ஏழைகள், கல்வியறிவு இல்லாதவர்கள், நோயுற்றவர்களை அதிகம் கொண்ட நாடாக இந்தியா இருந்தது என்றும், ஆனால், பிரதமர் நரேந்திர மோடியின் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மாடல், உணவு, உறைவிடம், சுகாதாரம், கல்வி, மின்சாரம், சமையல் எரிவாயு என அடிப்படை வசதிகள் எந்த பாகுபாடும் இல்லாமல், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள ஒவ்வொரு குடிமகனையும் சென்று அடைந்திருக்கிறது என்றும் தெரிவித்தார்.
இதையும் படிக்க: அண்ணாவிருது பெற்ற ஒருவர் என்னை ஒருமையில் பேசியிருக்கிறார் - தமிழிசை செளந்தர்ராஜன் வருத்தம்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/971wR3qதமிழகம் போன்ற ஒரு முற்போக்கான மாநிலத்தில் கூட வளர்ச்சி வேறுபாடுகள், துணை பிராந்திய ஏற்றத்தாழ்வுகள் இருந்ததாகவும், ஆனால், பிரதமரின் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, அடிப்படையில் மாற்றத்தை கொண்டு வந்திருப்பதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடியின் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, அடிப்படையில் எந்தவிதமான மாற்றத்தை கொண்டு வந்து, நாட்டை எப்படி வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்கிறது என்பதற்கான முன்னுதாரணத்தை விளக்கினார். இதற்கு முன்பு இருந்த வளர்ச்சி மாடல், பிராந்திய மற்றும் துணை பிராந்திய ஏற்றத்தாழ்வுகளையும், சமூக பதற்றங்களையும் தான் மிகப் பெரிய அளவில் உருவாக்கியிருந்ததாக தெரிவித்தார்.
தமிழகம் போன்ற ஒரு முற்போக்கான மாநிலத்தில் கூட வளர்ச்சி வேறுபாடுகள் மற்றும் துணை பிராந்திய ஏற்றத்தாழ்வுகள் இருந்ததாகவும் சுட்டிக்காட்டினார். இதற்கு முன்பு இருந்த மாடல் டார்வினியன் வளர்ச்சி என்றும், ஒப்பீட்டளவில் புத்திசாலிகளாக இருந்தவர்கள் நன்மைகளை ஒதுக்கிவிட்டு, பெருவாரியான மக்களை பின்தங்க வைத்துவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
இதனால் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக ஏழைகள், கல்வியறிவு இல்லாதவர்கள், நோயுற்றவர்களை அதிகம் கொண்ட நாடாக இந்தியா இருந்தது என்றும், ஆனால், பிரதமர் நரேந்திர மோடியின் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மாடல், உணவு, உறைவிடம், சுகாதாரம், கல்வி, மின்சாரம், சமையல் எரிவாயு என அடிப்படை வசதிகள் எந்த பாகுபாடும் இல்லாமல், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள ஒவ்வொரு குடிமகனையும் சென்று அடைந்திருக்கிறது என்றும் தெரிவித்தார்.
இதையும் படிக்க: அண்ணாவிருது பெற்ற ஒருவர் என்னை ஒருமையில் பேசியிருக்கிறார் - தமிழிசை செளந்தர்ராஜன் வருத்தம்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்