பான் கார்டுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான இறுதி காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. ஏற்கெனவே பலமுறை கெடு நீட்டிக்கப்பட்டதால், இன்று இணைக்க தவறினால் ஏப்ரல் மாதம் முதல் ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சொத்துகள் வாங்க, நகை வாங்க, கடன் வாங்க, வங்கிக் கணக்கு தொடங்க என பல்வேறு செயல்பாடுகளுக்கு பான் கார்டு அவசியமாக உள்ளது. வருமான வரித் தாக்கலுக்கும் பான் எண் அவசியம் தேவை. ஒருவரே நிறைய பான் எண்களை வைத்துக் கொண்டு வருமானத்தை குறைத்து காட்டுவதால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கருப்பு பணமும் புழங்குவதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதனை தவிர்க்க பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. ஏற்கெனவே பலமுறை கெடு நீட்டிக்கப்பட்டதால், இன்று இணைக்க தவறுபவர்கள், ஏப்ரல் மாதம் முதல் ஆயிரம் ரூபாய் வரை அபராதம் செலுத்த நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: நாடுகளுக்குள் தடையற்ற வர்த்தகம் அவசியம்' -பிரதமர் மோடி
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்