Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

'பாலியல் வழக்குகளில் ராஜஸ்தான் முதலிடம்; அதற்கு காரணம் இதுதான்' -அமைச்சர் பேச்சால் சர்ச்சை

https://ift.tt/kWiKdHJ

'பாலியல் வழக்குகளில் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது; ஏனெனில் அது ஆண்களின் மாநிலம்' என அம்மாநில அமைச்சர் சட்டசபையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை விவாதத்திற்கு பதிலளித்து, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் சாந்தி தாரிவால் பேசினார். அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துப் பேசிய சாந்தி தாரிவால், ''பாலியல் வழக்குகளில் ராஜஸ்தான் முதலிடத்தில் இருக்கிறது. அதில் சந்தேகமே இல்லை. ஆனால் பாலியல் வன்முறை வழக்குகளில் ராஜஸ்தான் ஏன் முன்னணியில் இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். காரணம், ராஜஸ்தான் ஆண்களின் மாநிலமாக உள்ளது" என்று அவர் பேசினார்.

image

சட்டசபையில் அமைச்சர் சாந்தி தரிவால் பேசிய இந்த வீடியோவை பகிர்ந்துள்ள பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷேஜாத், ''சாந்தி தரிவாலின் கருத்துகள் அதிர்ச்சியூட்டுவதாகவும், அருவருப்பானதாகவும் உள்ளது. ஆனால் அவர் அவ்வாறு பேசியது ஆச்சரியப்படுவதற்கில்லை. தரிவால் பாலியல் வன்கொடுமையை சட்டப்பூர்வமாக்குகிறார்" என்று விமர்சித்துள்ளார்.  

முன்னதாக அமைச்சர் சாந்தி தாரிவால் பேசுகையில், '‘பிரதமர் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் வாரணாசியில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. அங்கு புகார் கொடுத்தால் எப்ஐஆர் பதிவு செய்வதுகூட கடினம்’ என்று குற்றம்சாட்டியிருந்தார்.  

இதையும் படிக்க: "ஆபாச வலைதளங்களே பாலியல் வன்கொடுமைகளுக்கு காரணம்" - ராஜஸ்தான் அமைச்சர்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்