Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ஆடுகளத்தில் நேருக்கு நேர் முட்டிக் கொண்ட வார்னர்-அஃப்ரிடி: மீம் போட்டு தள்ளிய நெட்டிசன்கள்

https://ift.tt/9Irm18d

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இரு அணிகளும் தற்போது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. முதல் இரண்டு போட்டிகள் டிராவில் முடிந்த நிலையில் மூன்றாவது போட்டி லாகூர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 

இந்த போட்டியில் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது ஆஸ்திரேலிய அணி 134 ரன்களுடன் இரண்டாவது இன்னிங்ஸில் முன்னிலை பெற்றிருந்தது. கிட்டத்தட்ட ஆட்டத்தில் வெற்றி வாய்ப்பு ஆஸ்திரேலியா வசம் உள்ளது. இத்தகைய சூழலில் களத்தில் இருநாட்டு வீரர்கள் இருவருக்கு இடையே ஒரு சம்பவம் நடத்துள்ளது. 

ஆஸி. அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் மற்றும் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அஃப்ரிடியும் இதில் ஈடுபட்டனர். மூன்றாம் நாள் ஆட்டம் முடிவதற்கு ஒரே ஒரு பந்து எஞ்சியிருக்க. அந்த கடைசி பந்தை வீசிய பிறகு களத்தில் அது அரங்கேறியுள்ளது. 

அஃப்ரிடி அந்த பந்தை பவுன்சராக வீசியிருப்பார். ஸ்ட்ரைக்கிலிருந்த வார்னர் அதை டிஃபன்ஸ் ஆடி தடுத்திருப்பார். அதே நேரத்தில் மறுமுனையில் இருந்த உஸ்மான் கவாஜாவிடம் சிங்கிள் வேண்டாம் என சொல்லி இருப்பார் வார்னர். பந்தை வீச ரன்-அப் எடுத்த அஃப்ரிடி அப்படியே நிதானமாக வார்னருக்கு நேர் எதிரே வந்து நின்று பார்ப்பார். பின்னர் இருவரும் முகத்தில் சிரிப்புடன் விடை பெறுவார்கள். அது தான் தற்போது வைரலாகி உள்ளது. 

அந்த காட்சியின் வீடியோ மற்றும் போட்டோவை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர். ‘பிரெஞ்சு முத்தம் கொடுக்க முடியாது. ஏனெனில் ஹெல்மெட் அதை தடுக்கும்’, WWE களத்தில் ரி மிஸ்டோரியோவும், கிரேட் காளியும் எதிரெதிராக நிற்கும் படம், வார்னர் விளாசிய மொத்த டெஸ்ட் சதங்களின் எண்ணிக்கை 24 - அஃப்ரிடி விளையாடியுள்ள மொத்த டெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கை 24 என விதவிதமான ஒப்பீடுகளை செய்தார்கள் நெட்டிசன்கள். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்