1935-ஆம் ஆண்டு காசநோய்க்கான (டி.பி) மருந்துகள் ஏதும் கண்டுபிடிக்கப்படாத காலம். உத்தராகண்ட் மாநிலம் நைனித்தால் மாவட்டத்தில் அமைந்திருந்த கிங் ஜார்ஜ் எட்வர்ட் காசநோய் சானிடோரியத்தில் ஓர் இளம்பெண் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு எல்.எஸ்.ஒயிட் என்ற ஆங்கில மருத்துவர் சிகிச்சை அளித்து வந்தார். அப்போது சிகிச்சை என்பது பெரும்பாலும் தூய காற்றும் புரதச்சத்து மிக்க உணவுமே ஆகும்.
அல்மோர சிறையில் அடைக்கப்பட்டிருந்த அந்தப் பெண்ணின் கணவர், சிறை நிர்வாகத்திடம் அனுமதி பெற்று மனைவியைக் காண வருகிறார். அப்பெண்ணின் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டவுடன் அவரை மேல் சிகிச்சைக்காக சுவிட்சர்லாந்து அழைத்துச் செல்கிறார். ஆனால், சிகிச்சை பலனின்றி கணவர் கண் முன்பே அந்தப் பெண் இறந்து போகிறார். அந்தப் பெண் இறந்து சரியாக 11 ஆண்டுகள் கழித்து அவரது கணவர் இந்தியாவின் பிரதமர் ஆகிறார். ஆம், இறந்தது இந்தியாவில் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் மனைவி கமலா நேரு ஆவார். மருந்து, மாத்திரைகள் இன்றி இந்தியாவில் முதல் பிரதமரின் குடும்பத்தில் காசம் ஒருவரின் சுவாசத்தை நிறுத்திவிட்டிருந்தது.
https://ift.tt/EqGBtVJ1935-ஆம் ஆண்டு காசநோய்க்கான (டி.பி) மருந்துகள் ஏதும் கண்டுபிடிக்கப்படாத காலம். உத்தராகண்ட் மாநிலம் நைனித்தால் மாவட்டத்தில் அமைந்திருந்த கிங் ஜார்ஜ் எட்வர்ட் காசநோய் சானிடோரியத்தில் ஓர் இளம்பெண் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு எல்.எஸ்.ஒயிட் என்ற ஆங்கில மருத்துவர் சிகிச்சை அளித்து வந்தார். அப்போது சிகிச்சை என்பது பெரும்பாலும் தூய காற்றும் புரதச்சத்து மிக்க உணவுமே ஆகும்.
அல்மோர சிறையில் அடைக்கப்பட்டிருந்த அந்தப் பெண்ணின் கணவர், சிறை நிர்வாகத்திடம் அனுமதி பெற்று மனைவியைக் காண வருகிறார். அப்பெண்ணின் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டவுடன் அவரை மேல் சிகிச்சைக்காக சுவிட்சர்லாந்து அழைத்துச் செல்கிறார். ஆனால், சிகிச்சை பலனின்றி கணவர் கண் முன்பே அந்தப் பெண் இறந்து போகிறார். அந்தப் பெண் இறந்து சரியாக 11 ஆண்டுகள் கழித்து அவரது கணவர் இந்தியாவின் பிரதமர் ஆகிறார். ஆம், இறந்தது இந்தியாவில் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் மனைவி கமலா நேரு ஆவார். மருந்து, மாத்திரைகள் இன்றி இந்தியாவில் முதல் பிரதமரின் குடும்பத்தில் காசம் ஒருவரின் சுவாசத்தை நிறுத்திவிட்டிருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்