உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுதினம் நடைபெறவுள்ள நிலையில், இந்த தேர்தலில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் களமிறங்குகிறார்.
உத்தரப்பிரதேசத்தில் 3ஆவது கட்ட தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் நிறைவு பெற்றது , 59 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெறுகிறது. இந்த சூழலில் அகிலேஷ் யாதவ் போட்டியிடும் கர்ஹால் தொகுதியில் வாக்குசேகரிப்பு தீவிரமாக நடைபெற்றது.
உத்தரப்பிரதேசமாநில சட்டப்பேரவைக்கான மூன்றாம் கட்ட தேர்தலை பொறுத்தவரை ஹத்ராஸ், பிரோசாபாத், மெயின்ன்புரி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் உள்ள 59 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு பிப்ரவரி 20-ந் தேதி நடைபெறுகிறது. மூன்றாம் கட்ட தேர்தலில் மொத்தம் 2 கோடியே15 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களாக உள்ளனர். மூன்றாம் கட்ட தேர்தலுக்காக மொத்தம் வாக்குப்பதிவு நடைபெறும் 16 மாவட்டங்களில் 25,741 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மொத்தம் 623 வேட்பாளர்கள் இந்த மூன்றாம் கட்ட தேர்தல் போட்டி களத்தில் உள்ளனர். முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித்தலைவருமான அகிலேஷ் யாதவ் களம் காணும் தொகுதியான கர்ஹாலும் 3 ஆம் கட்டத்தில் தேர்தலை சந்திக்கிறது. இத்தொகுதியில் அகிலேஷ் யாதவை எதிர்த்து மத்திய இணை அமைச்சர் சத்யபால் சிங் களம் காண்கிறார்.
தேர்தல் நடைபெறும் 16 மாவட்டங்களில் 9 மாவட்டங்களில் யாதவர் இனத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் உள்ளனர். 3-ம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் மாவட்டங்களில் உருளைக்கிழங்கு சாகுபடிதான் பிரதானம். உத்தரப்பிரதேச உருளை கிழங்குகளை வாங்கப்போவது இல்லை என தெலங்கானா அரசு அறிவித்திருந்தது. அப்போது, தெலங்கானா அரசுடன் யோகி ஆதித்யநாத் அரசு பேச்சுவார்த்தை நடத்தாமல் இருந்ததை அகிலேஷ் விமர்சித்து வருகிறார். ஆகையால் உருளைக்கிழங்கு விவகாரமும் 3-ம் கட்ட தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
வேளாண் சட்டங்களை எதிர்த்து நடந்த போராட்டம் ஹத்ராஸ் வன்கொடுமை சம்பவம், லக்கிம்பூர் கேரி வன்முறை உள்ளிட்ட பிரச்னைகள் பாரதிய ஜனதா கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்த பிரச்னைகளை முன்வைத்துதான் சமாஜ்வாதி பிரசாரம் செய்தது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்