கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸை இழந்த இந்திய அணி முதலில் பேட் செய்தது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 1 - 0 என முன்னிலை பெற்றுள்ளது. இது இரண்டாவது போட்டியாகும்.
கேப்டன் ரோகித் மற்றும் இஷான் கிஷன் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். கிஷன் 2 ரன்களில் அவுட்டானார். பின்னர் வந்த கோலியுடன் இணைந்து 49 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் ரோகித். 19 ரன்கள் எடுத்த நிலையில் அவரும் அவுட்டானார். சூர்யகுமார் யாதவும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். மறுமுனையில் விளையாடிக் கொண்டிருந்த கோலி 39 பந்துகளில் அரைசதம் பதிவு செய்தார். 41 பந்துகளை சந்தித்த அவர் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஆட்டத்திற்கான ஃபினிஷிங் பணியை பண்ட் மற்றும் வெங்கடேஷ் ஐயர் கவனித்துக் கொண்டனர். இருவரும் 76 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பண்ட் 28 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து இறுதி வரை அவுட்டாகாமல் இருந்தார். வெங்கடேஷ் ஐயர் 18 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் அவுட்டானார். 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணி 187 ரன்கள் எடுத்தால் இந்த போட்டியில் வெற்றி பெறலாம். இந்திய அணி 200+ ரன்களுக்கு மேல் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இருந்தாலும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அதனை தடுத்துவிட்டனர். கடைசி ஓவரை வீசிய ஷெப்பர்ட் வெறும் 7 ரன்களை மட்டும் கொடுத்து ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்