Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை ஏன்? - அதிபர் புடின் விளக்கம்

உக்ரைன் மீதான சிறப்பு ராணுவ நடவடிக்கை கட்டாயத்தின் காரணமாகவே எடுக்கப்பட்டதாகவும், உலக நாடுகளின் பொருளாதாரத்திற்கு சேதம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் எடுக்கப்படவில்லை என்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விளக்கம் அளித்துள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அமெரிக்கா, பிரிட்டனை தொடர்ந்து ஐரோப்பிய யூனியனும், கடுமையான பொருளாதார தடைகளை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஐரோப்பிய யூனியன் தலைவர் ஊர்சுலா வான் டெர் லெயன், “ரஷ்யாவின் தொழில் அடித்தளத்தை சர்வதேச நாடுகளில் இருந்து படிப்படியாக விலக்கி வைக்கும் வகையிலான தடைகளை விதித்திருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

image

இந்தச் சூழலில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், மாஸ்கோவில் தொழிற்துறை தலைவர்களை கூட்டி அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் சர்வதேச பொருளாதார தடைகள் காரணமாக ரஷ்யாவிற்கு ஏற்படவிருக்கும் இழப்புகள் குறித்து அவர்களிடம் விரிவாக ஆலோசித்தார். அந்த நேரத்தில் பேசிய அவர், உக்ரைன் மீதான சிறப்பு ராணுவ நடவடிக்கை கட்டாயத்தின் பேரிலேயே எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். சர்வதேச பொருளாதாரத்தில் ரஷ்யா தொடர்ந்து அங்கம் வகிக்கும் என்றும், ரஷ்யாவையும் உள்ளடக்கிய சர்வதேச பொருளாதாரத்தை சேதப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் சிறிதும் இல்லை என்றும் கூறினார். அதே நேரம் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகளால் ஏற்படும் விளைவுகளை சந்திக்க ரஷ்யா தயாராக இருக்கிறது என்றும் கூறினார்.

இதற்கிடையே, உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையை படையெடுப்பு என்று சொல்வது பாரபட்சமானது என சீனா ஆதரவு தெரிவித்துள்ளது. அதே போல், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும், மாஸ்கோ சென்று ரஷ்ய அதிபரை சந்தித்து படையெடுப்புக்கு மறைமுகமான ஆதரவை தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. எனினும், இருநாட்டு நட்புறவு குறித்தும், பிராந்திய விவகாரங்கள் மற்றும் தெற்காசியாவின் வளர்ச்சி பற்றி பேசியதாகவும் ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைன் மீதான சிறப்பு ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்ட பின் புடின் நேருக்கு நேர் சந்தித்த முதல் வெளிநாட்டு தலைவர் இம்ரான் கான். உக்ரைன் நிலவரம் தொடர்பாக, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனையும், தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விளக்கம் அளித்துள்ளார்.

சமீபத்திய செய்தி: ரஷ்யா-உக்ரைன் விவகாரத்தில் இந்தியா அமெரிக்காவுடன் உள்ளதா? - ஜோ பைடன் பதில்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/QFqUPM2

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்