இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மார்ச் 26-ஆம் தேதி தொடங்கி, மே 29-ஆம் தேதி நிறைவடைகிறது.
ஐபிஎல் நிர்வாக கவுன்சில் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் பட்டேல், இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் மார்ச் 26ம் தேதி சனிக்கிழமை தொடங்கும் என அறிவித்தார். மேலும் அவர், மும்பை, நவி மும்பை, புனே ஆகிய 3 இடங்களில் உள்ள மைதானங்களில் லீக் ஆட்டங்கள் நடைபெறுவதாகத் தெரிவித்தார். பிளே-ஆப் சுற்று ஆட்டங்கள் நடைபெறும் மைதானங்கள் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அதே போல் இறுதிப் போட்டியை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடத்த வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
மகாராஷ்டிரா மாநில அரசால் நிர்ணயிக்கப்பட்ட கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களின்படி ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள். முதலில் 40 சதவீத ரசிகர்கள் அனுமதிக்கப்பட இருக்கும் நிலையில், கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கும் பட்சத்தில், முழு அளவில் ரசிகர்கள் அனுமதிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஐ.பி.எல். சீசனில் புதிதாக லக்னோ, குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 புதிய அணிகள் பங்கேற்கின்றன. 10 அணிகள் பங்கேற்பதால், ஐ.பி.எல். போட்டியின் ஆட்டங்கள் 74 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: இந்தியா அபார பந்துவீச்சு: வெற்றிக்கு முயற்சி செய்யாமலேயே தோற்ற இலங்கை!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்