உக்ரைன் நாட்டின் மீது படையெடுத்து போரிட்டு வருகிறது ரஷ்யா. இதற்கு பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. உக்ரைன் மக்கள் புகலிடம் தேடி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். சில மக்களோ ‘வீழ்வது யாராகினும், வாழ்வது நாடாகட்டும்’ என தங்கள் நாட்டிலேயே தொடர்ந்து இருந்து வருகின்றனர். இந்த நிலையில் உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்கின் ஆதரவு உக்ரைனுக்கு கிடைத்துள்ளதாக தெரிகிறது.
அவரது ஸ்பேஸ்X நிறுவனத்தின் ‘ஸ்டார்லிங்க்’ மூலம் போரினால் பாதிக்கப்பட்டு வரும் அந்நாட்டுக்கு இணைய சேவை அளித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய நாட்டு படையினரால் உக்ரைனில் இணைய சேவைகள் வழங்கி வந்த நிறுவனங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஸ்டார்லிங்க் உதவி வருகிறது. சாட்டிலைட் மூலம் ஸ்டார்லிங்க் தனது இணைய சேவையை உக்ரைனுக்கு வழங்கி வருகிறது. உக்ரைன் நாட்டின் துணை பிரதமர் மைக்கைலோ ஃபெடோரோவ் (Mykhailo Fedorov) கேட்டுக் கொண்டதற்கு ஏற்ப ஸ்டார்லிங்க் உதவ தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மஸ்க் ட்வீட் மூலம் உறுதி செய்துள்ளார்.
“ஸ்டார்லிங்க் சேவை உக்ரைன் நாட்டில் ஆக்டிவாக உள்ளது” என மஸ்க் ட்வீட் செய்து, உக்ரைன் நாட்டு அரசு வைத்த கோரிக்கைக்கு ட்வீட் மூலம் ரெஸ்பான்ஸ் கொடுத்துள்ளார் அவர்.
உக்ரைன் நாட்டின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இணைய சேவை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்