இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக விளையாடிய 11 டி20 போட்டிகளிலும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. தர்மசாலாவில் நேற்று நடைபெற்ற டி20 போட்டியும் இதில் அடங்கும். தொடக்க வீரர்கள் விரைவாக அவுட்டான போதும் ஷ்ரேயஸ் ஐயர், சஞ்சு சாம்சன் மற்றும் ரவீந்திர ஜடேஜா என மூவரின் பங்கும் இந்த வெற்றியில் அதிகம்.
இந்த நிலையில் கேப்டன் ரோகித் ஷர்மா டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை படைத்துள்ளார். அவர் சொந்த நாட்டு மண்ணில் அணியை வழிநடத்திய 17 டி20 போட்டிகளில் 16-இல் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. நேற்றைய வெற்றியின் மூலம் சொந்த நாட்டில் நடைபெற்ற டி20 போட்டிகளில் அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். அதன் மூலம் இங்கிலாந்து கேப்டன் மோர்கன் மற்றும் கேன் வில்லியம்சன் வசமிருந்த சாதனையை தகர்த்துள்ளார்.
இந்திய அணியை மொத்தம் 24 டி20 போட்டிகளில் ரோகித் கேப்டனாக வழிநடத்தியுள்ளார். அதில் 22 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இளமையும், அனுபவமும் கலந்த அணியை அவர் திறம்பட வழிநடத்தி வருகிறார். மேலும் இலங்கைக்கு எதிரான தொடரை வென்றதன் மூலம் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 7 டி20 தொடர்களை இந்தியா வென்று அசத்தியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்