இந்தியச் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 12 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் தொடர் கோரிக்கைகளின் காரணமாக, இந்தியாவின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 12 பேரை விடுதலை செய்ய மத்திய அரசு ஒப்புக்கொண்டது. பாகிஸ்தானைச் சேர்ந்த 6 மீனவர்கள் உள்ளிட்ட 12 பேர், தனி வாகனம் மூலம் வாகா எல்லை வரை கொண்டுசெல்லப்பட்டு, அந்நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் 80 வயது முதியவர் ஆவார். சிறைகளிலிருந்து விடுதலையாகி தாய் மண்ணில் கால் பதித்த பாகிஸ்தானைச் சேர்ந்த 12 பேரும், இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
இதையும் படிக்க: ’விடுதலை புலிகளுக்கு ரூ.42 கோடி மாற்ற முயற்சி’ - என்.ஐ.ஏ விசாரணையில் இலங்கை பெண் தகவல்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/HYXlbwgஇந்தியச் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 12 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் தொடர் கோரிக்கைகளின் காரணமாக, இந்தியாவின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 12 பேரை விடுதலை செய்ய மத்திய அரசு ஒப்புக்கொண்டது. பாகிஸ்தானைச் சேர்ந்த 6 மீனவர்கள் உள்ளிட்ட 12 பேர், தனி வாகனம் மூலம் வாகா எல்லை வரை கொண்டுசெல்லப்பட்டு, அந்நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் 80 வயது முதியவர் ஆவார். சிறைகளிலிருந்து விடுதலையாகி தாய் மண்ணில் கால் பதித்த பாகிஸ்தானைச் சேர்ந்த 12 பேரும், இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
இதையும் படிக்க: ’விடுதலை புலிகளுக்கு ரூ.42 கோடி மாற்ற முயற்சி’ - என்.ஐ.ஏ விசாரணையில் இலங்கை பெண் தகவல்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்