பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா, தெலங்கானாவில் ஆயிரம் ஏக்கர் வனத்தை அடர்வனமாக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்.
மெட்கல் மாவட்டத்தில் ஆயிரம் ஏக்கர் வனப்பகுதியை தத்தெடுத்துள்ள நாகார்ஜூனா, அதை பராமரிக்க 2 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளார். தனது தந்தையும் பழம்பெரும் நடிகருமான அக்கினேனி நாகேஸ்வர ராவின் பெயரில் இந்தப் பணிகளை மேற்கொள்வதாக அவர் அறிவித்துள்ளார். ஆயிரம் ஏக்கர் பரப்பில் ஏற்கெனவே உள்ள மரங்களை பராமரிப்பதோடு, மேலும் மரக்கன்றுகள், பசுந்தாவரங்கள் நட்டு வளர்க்கப்பட உள்ளது. திட்டத்தின் தொடக்க விழாவில், நாகார்ஜூனாவின் மனைவியும் நடிகையுமான அமலா, அவர்களது பிள்ளைகளான நாக சைதன்யா, அகில் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இதையும் படிக்க: இந்தோனேஷிய மொழியில் ரீமேக் ஆகும் முதல் தமிழ் படம் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்