தஞ்சையில் தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவியின் பெற்றோரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி, தஞ்சையில் உள்ள தனியார் பள்ளியின் விடுதியில் தங்கியில் படித்து வந்தார். அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், மாணவியின் மரணம் குறித்து சர்ச்சைகள் எழுந்தன. இதுதொடர்பாக மாணவியின் பெற்றோரிடம் திருவையாறு உதவி காவல் கண்காணிப்பாளர் 2 மணி நேரம் விசாரணை நடத்தினார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாணவியின் சித்தி, தங்கள் மகள் கொடுமைப்படுத்தப்பட்டதாகவும் அவரது மரணத்துக்கு நீதி வேண்டும் என்றும், அதுவரை உடலை வாங்கப்போவதில்லை என்றும் கூறினார். இவ்வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக்கோரி மாணவியின் தந்தை, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிபதி, எவ்வித புகாருக்கும் இடமளிக்காத வகையில் திருக்காட்டுப்பள்ளி காவல்துறையினர் வழக்கை விசாரிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
இதையும் படிக்க: தமிழ்த்தாய் பாடலில் கருணாநிதி மேற்கொண்ட திருத்தங்கள் செல்லும் - சென்னை உயர்நீதிமன்றம்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3FQYJ6f

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்