கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் இன்று முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளின் நலன் கருதி, சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், கோயம்பேடு பேருந்து நிலையம் போன்ற இடங்களில் வழக்கமான ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. செயலி மூலம் முன்பதிவு செய்து இயக்கப்படும் வாடகை கார்கள், பயணிகளை ஏற்றிச்செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட ரயில் நிலையங்கள், வெளியூர் பேருந்து நிலையங்களில் பயணிகளின் நலனுக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் முந்தைய முழு ஊரடங்கு நாட்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட அத்தியாவசிய செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும் என்றும், கொரோனா தொற்றிலிருந்து காத்திட அரசு மேற்கொள்ளும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு மக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிக்க: கர்நாடகாவில் வார இறுதி முழு ஊரடங்கு வாபஸ்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3KMb3Ztகொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் இன்று முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளின் நலன் கருதி, சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், கோயம்பேடு பேருந்து நிலையம் போன்ற இடங்களில் வழக்கமான ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. செயலி மூலம் முன்பதிவு செய்து இயக்கப்படும் வாடகை கார்கள், பயணிகளை ஏற்றிச்செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட ரயில் நிலையங்கள், வெளியூர் பேருந்து நிலையங்களில் பயணிகளின் நலனுக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் முந்தைய முழு ஊரடங்கு நாட்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட அத்தியாவசிய செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும் என்றும், கொரோனா தொற்றிலிருந்து காத்திட அரசு மேற்கொள்ளும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு மக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிக்க: கர்நாடகாவில் வார இறுதி முழு ஊரடங்கு வாபஸ்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்