தமிழகம் முழுவதும் பொங்கல் கொண்டாட்டம் இன்றிலிருந்து தொடங்கியுள்ளது. பல இடங்களில் ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் வெகு விமர்சையாக செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவனியாபுரம் போட்டியில் பங்கேற்கும் காளைகள் மற்றும் காளையர்களுக்கான பரிசுப் பொருட்கள் நன்கொடையாக குவிந்து வருகின்றன.
அமர்க்களப்படுத்தும் ஜல்லிக்கட்டு போட்டிக்காக அவனியாபுரம் தயாராகி வருகிறது. ஒருபுறம் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம் பரிசுப் பொருட்கள் நன்கொடையாக குவிந்து வருகின்றன. பொங்கல் விழாவையொட்டி வரும் 14ஆம் தேதி மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. 2 தவணை தடுப்பூசி, ஆர்.டி.பி.சி.ஆர் கொரோனா பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், போட்டியில் பங்கேற்க விண்ணப்பித்திருந்த மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது.
ஜல்லிக்கட்டு வெற்றியாளர்களுக்கு வழங்குவதற்காக பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் தன்னார்வலர்கள் பரிசு பொருட்களை நன்கொடையாக வழங்கி வருகின்றனர். திமுக சார்பில் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் 100 தங்க காசுகள், 25 பீரோ, 25 வாசிங் மெஷின் என 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசு பொருட்களை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகரிடம் ஒப்படைத்தார்.
தொடர்புடைய செய்தி: தமிழகத்தின் இந்த ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/33uzY2cதமிழகம் முழுவதும் பொங்கல் கொண்டாட்டம் இன்றிலிருந்து தொடங்கியுள்ளது. பல இடங்களில் ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் வெகு விமர்சையாக செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவனியாபுரம் போட்டியில் பங்கேற்கும் காளைகள் மற்றும் காளையர்களுக்கான பரிசுப் பொருட்கள் நன்கொடையாக குவிந்து வருகின்றன.
அமர்க்களப்படுத்தும் ஜல்லிக்கட்டு போட்டிக்காக அவனியாபுரம் தயாராகி வருகிறது. ஒருபுறம் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம் பரிசுப் பொருட்கள் நன்கொடையாக குவிந்து வருகின்றன. பொங்கல் விழாவையொட்டி வரும் 14ஆம் தேதி மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. 2 தவணை தடுப்பூசி, ஆர்.டி.பி.சி.ஆர் கொரோனா பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், போட்டியில் பங்கேற்க விண்ணப்பித்திருந்த மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது.
ஜல்லிக்கட்டு வெற்றியாளர்களுக்கு வழங்குவதற்காக பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் தன்னார்வலர்கள் பரிசு பொருட்களை நன்கொடையாக வழங்கி வருகின்றனர். திமுக சார்பில் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் 100 தங்க காசுகள், 25 பீரோ, 25 வாசிங் மெஷின் என 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசு பொருட்களை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகரிடம் ஒப்படைத்தார்.
தொடர்புடைய செய்தி: தமிழகத்தின் இந்த ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்