இந்தியா - இஸ்ரேல் நட்புறவு வரும் காலங்களில் புதிய மைல்கல்லை எட்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையிலான 30 ஆண்டுகால உறவை குறிக்கும் விதமாக மும்பை கேட்வே ஆஃப் இந்தியா பகுதியில் இரண்டு நாடுகளின் தேசியக் கொடிகள் காட்சிப்படுத்தப்பட்டன. 30 ஆண்டு கால நட்புறவுக்கு வாழ்த்து தெரிவித்து பேசிய பிரதமர், பல நூற்றாண்டுகளாக இந்தியா - இஸ்ரேல் மக்களுக்கு இடையே வலுவான உறவு உள்ளது என தெரிவித்தார்.

உலகம் முக்கிய மாற்றங்களை காணும் போது இந்தியா - இஸ்ரேல் இடையேயான உறவின் முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கும் என அவர் கூறியுள்ளார். இந்தியா - இஸ்ரேல் நட்புறவு வரும் காலங்களில் புதிய மைல்கல்லை எட்டும் என்றும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/GHvhrmKnu

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்