டெல்லியில் நடைபெற்ற தேசிய நோய் பரவல் தடுப்பு வல்லுநர் குழு ஆலோசனையில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி அவசியமா என்பது குறித்தும், குழந்தைகளுக்கான தடுப்பூசி குறித்தும் தேசிய நோய் பரவல் தடுப்பு வல்லுநர் குழு ஆலோசனை மேற்கொண்டது. இரண்டு மணி நேரம் நடைபெற்ற ஆலோசனையில் கூடுதல் டோஸ் தடுப்பூசி மற்றும் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக எந்த இறுதி பரிந்துரையும் செய்யப்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் ஏற்கெனவே கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு அனுமதியளித்துள்ளன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3DqEtXTடெல்லியில் நடைபெற்ற தேசிய நோய் பரவல் தடுப்பு வல்லுநர் குழு ஆலோசனையில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி அவசியமா என்பது குறித்தும், குழந்தைகளுக்கான தடுப்பூசி குறித்தும் தேசிய நோய் பரவல் தடுப்பு வல்லுநர் குழு ஆலோசனை மேற்கொண்டது. இரண்டு மணி நேரம் நடைபெற்ற ஆலோசனையில் கூடுதல் டோஸ் தடுப்பூசி மற்றும் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக எந்த இறுதி பரிந்துரையும் செய்யப்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் ஏற்கெனவே கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு அனுமதியளித்துள்ளன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்